பக்கம்:ஆதி அத்தி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காவிரிக்குக் கரையமைத்துச் சோழ நாட்டின் வளத்தைப் பெருக்கியவன் கரிகாலன். அதனலேயே அவனுக்குப் பெருவளத்தான் என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். காவிரிப்பூம்பட்டினமும் அவ னுக்கு மற்ருெரு தலைநகராக அமைந்தது. கரி காலன் வரலாறே உள்ளத்தைக் கவரக்கூடியது. அவன் சிறு குழந்தையாக இருக்கின்றபோதே அவ னுடைய தந்தை இளஞ்சேட்சென்னி காலமானன். கரிகாலன் பட்டமெய்தா வண்ணம் தடுப்பதற்கே பல சூழ்ச்சிகள் நடந்தன. அவற்றையெல்லாம் களேந்து அவன் பட்டத்திற்கு வந்ததோடு நாட்டை யும் திறம்பட ஆட்சி புரிந்தான். அவனுடைய இளமையை எண்ணி வேளிர் தலைவர்களும், பாண்டியனும், சேரனும் சேர்ந்து கொண்டு அவனை எதிர்த்தனர். வெண்ணி என்னு மிடத்தில் அவர்களையெல்லாம் கரிகாலன் புறங் கண்டதோடு அமையாமல், பிறகு பல அரசர் களையும் எதிர்த்து வெற்றிகொண்டான். அத்துடன் இமயம் வரையில் படையெடுத்துச் சென்று பல அரசர்களை வென்முன். அவனுடைய வீரத்திற்கும் வலிமைக்கும் பணிந்த அரசர்கள் பலர் தந்த பொருள்களையும் பெற்றுச் சோழ நாட்டிற்குத் திரும்பினன். பெருஞ்சேரலாதன் என்ற சேரன் வெண்ணிப் பேர்ரிலே தோல்வியுற்றதோடு புறப்புண் பெற்ற மையால் நாணம் கொண்டு வடக்கிருந்து உயிர் துறந்தான். கழாத்தலையார், மாமூலனர் என்னும் புலவர்கள் அவனைப் பாராட்டிப் பாடியுள்ளார்கள். கரிகாற்பெருவளத்தானைப் பாடவந்த வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவரும், வெண் ணிப் போரில் பெரு வெற்றிபெற்றுப் புகழ் எய்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/7&oldid=742460" இலிருந்து மீள்விக்கப்பட்டது