பக்கம்:ஆதி அத்தி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 71 பொன்னி: சரி சரி, நாளைக்குத் தாலி கட்டுகிறேன். கழுத்தே சுகமா இரு என்ருனும் ஒருத்தன். மருதி: அப்படி ஒருத்தன் சொல்லவில்லை; ஒருத்தி தான் சொன்னளாம்-நாளைக்குத் தாலி கட்டுவான் கழுத்தே சுகமா இரு-என்று சொன்ன ளாம்; சொல்லு வதையாவது சரியாகச் சொல். பொன்னி: ஒருத்தன் சொல்லியிருந்தாலும் சரி; ஒருத்தி சொல்லியிருந்தாலும் சரி-விஷயம் ஒன்றுதான். மருதி: அம்மணி, நீ பழைய பல்லவியை மறுபடியும் தொடங்கிவிடாதே, வா, காவிரிக்குப் டோவோம். நண்டுக் குட்டி பிடித்துக் கொடுக்கிறேன் வா. பொன்னி: வெளியே போக இப்பவாவது மனது வந்ததே-தாயே உனக்குக் கோடி வந்தனம். மருதி. நண்டுக் குட்டி போதுமா? தவளைக் குட்டி வேண்டாமா? அப்புறம் மீன் குட்டி? எல்லாம் பிடிக் கலாம் வா. (சிரித்துக்கொண்டே இருவரும் புறப்படுகிருர்கள்.) திரை காட்சி ஐந்து (காவிரிக் கரையிலே மருதி யும் பொன்னியும் பேசிக் கொண்டே வருகிரு.ர்கள். காலை சுமார் எட்டு மணி இருக்கும் ஆட்டனத்தி சுய நினைவில்லாது, கரையில் வெள்ளத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடக் கிருன்.) மருதி: நேற்று வெள்ளம் அதிகமாக வந்திருக் கிறது. நாம் கவனிக்கவே இல்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/71&oldid=742462" இருந்து மீள்விக்கப்பட்டது