பக்கம்:ஆதி அத்தி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஆதி அத்தி (அத்தியின் காலை மெதுவாகத் தேய்க்கிருள்.) அத்தி : இது கழார்ப்பட்டணமா? யார் அங்கே பாடுகிருர்கள்? மருதி : இது கழார் அல்ல-காவிரிப்பூம் பட்டினத் திற்கு அருகிலே இது ஒரு தனி இடம். என் வீட்டைத் தவிர இங்கே வேறு வீடு கிடையாது... அத்தி : காவிரிப்பூம் பட்டினமா?...... அப்போ நீ ?ri-חrש மருதி : நான் பாண் மகள்: மருதி என்னுடைய பெயர். (பொன்னி ஆடைகளை எடுத்துக்கொண்டு ஓடி வருகிருள்.) அதோ புதிய ஆடைகளெல்லாம் வந்துவிட்டன. (பொன்னியைப் பார்த்து) பொன்னி, அவர் மிகவும் களைத்திருக்கிரு.ர். வீட்டிற்கு ஒடிப்போய் இளஞ்சூடான பாலிலே கொஞ்சம் தேன் கலந்து எடுத்துக்கொண்டு வா. பொன்னி ஈரமான ஆடைகளை யெல்லாம் களைந்து விடும்படி சொல், மருதி. இதோ நான் வந்துவிடுகிறேன். (மறுபடியும் வீட்டை நோக்கி ஓடுகிருள்.) மருதி : இந்தப் போர்வையை முதலிலே உடம்பில் போர்த்திக் கொள்கிறீர்களா? அப்பொழுது உடம்பிலே கொஞ்சம் சூடு ஏற்பட்டு உணர்ச்சி யுண்டாகும். அத்தி : வெள்ளத்திலே அடிபட்டவர்களைக் காப் பாற்றும் வித்தையெல்லாம் உனக்கு நன்ருகத் தெரியும் போலிருக்கிறதே......? மருதி : காவிரி கடலிலே கலக்கின்ற இந்த இடத் திலே பிறந்தவர்களுக்குத் தண்ணிரே எல்லாம்-வாழ்வும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/74&oldid=742465" இலிருந்து மீள்விக்கப்பட்டது