ஆதி அத்தி 75 அதிலேதான்-தாழ்வும் அதிலேதான்-அதேைல இந்த விஷயமெல்லாம் நன்முகத் தெரியும். அத்தி : இருந்தாலும் மருதி, உன் கைகளுக்கே உயிர் கொடுக்கும்படியான சக்தி தனிச் சிறப்பாக இருக் கிறது. மருதி : நீங்கள் நீந்துவதில் மிகவும் திறமை வாய்ந்தவரென்று தெரிகிறது. அத்தி : எப்படிக் கண்டாய்? மருதி : இல்லாவிட்டால் தண்ணிரை நிறையக் குடிக்காமல் சமாளித்துக்கொண்டு வந்திருக்க முடியாது. வெள்ளத்தில் அகப்பட்டவர்களில் பலபேர் இந்தத் திறமை இல்லாமல்தான் உயிரிழக்கிருர்கள். அத்தி : உன்னுடைய உதவி இல்லாவிட்டாலும் நானும் இன்று உயிரிழந்திருப்பேன். மருதி (பொன்னி பால் கொண்டு வருவதைப் பார்த்து) ; அதோ பால் வந்துவிட்டது-பொன்னி. பாலை இப்படி என்னிடம் கொடு. (பாலை வாங்கிக்கொள்கிருள்.) கொஞ்சம் பால் சாப்பிடுங்கள். சூடாகப் பால் அருந்தில்ை உடம்புக்குச் சக்தி வரும். (அத்தி கையை நீட்ட முயல்கிருன். கை நடுங்கு கிறது. தண்ணிரில் நீண்ட காலமிருந்ததால் நரம்புகளெல்லாம் தளர்ச்சியுற்றிருக்கின்றன. குவளையைப் பிடிக்க இயலாது தடுமாறுகிருன்.) உங்கள் கை நடுங்குகிறதே. வெள்ளத்திலே நீண்ட நேரமிருந்ததால் நரம்பெல்லாம் தளர்ந்து உணர்ச்சி பற்
பக்கம்:ஆதி அத்தி.pdf/75
Appearance