பக்கம்:ஆதி அத்தி.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆதி அத்தி றிருக்கிறது. வேண்டாம். நீங்கள் அசையாமலிருங்கள் நானே பாலைத் தங்கள் வாயில் மெதுவாக ஊற்றுகிறேன். (பாலை வாயில் மெதுவாகக் கொடுக்கிருள். அத்தி ஆவலோடு பருகுகிருன்.) திரை காட்சி ஆறு (கழார் நகரில் கரிகாற் பெருவளத்தானின் அரண் மனையில் ஒரு சிறிய மண்டபம், கரிகாற் பெரு வளத்தானும் அமைச்சரும் பேசிக்கொண்டிருக் கிரு.ர்கள். நண்பகல் நேரம்.) கரிகாலன் : வலை வீசுவோர் எதுவரையிலும் சென் றிருக்கிருர்கள்? அமைச்சர் : ஒடக்காரர்களும் அரிப்புக்காரர்களும் இன்று காலையிலே நான் அவர்களை விட்டுப் பிரியும் போது காவிரிப் பூம்பட்டினத்திற்கு நான்கு நாழிகை தூரத்தில் இருந்தார்கள். இப்பொழுது உச்சி வேளையாகி விட்டது. இதற்குள் காவிரிப்பூம்பட்டினத்தை அணுகி யிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கரிகாலன் : அவர்களிடமிருந்து சேதி ஒன்றும் வர வில்லையா? அமைச்சர் : நாழிகைக்கு ஒருவராக அங்கிருந்து சேதி கொண்டு வருவோர் வந்துகொண்டு தானிருக் கிருர்கள். ஆனால், ஒரே சேதிதான். இன்னும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. முடியவில்லை. இதேதான். கரிகாலன் (கவலை மிகுந்து): நேற்றுக் காலையில் அவர் வெள்ளத்தில் இறங்கியதிலிருந்து, கணக்கிட்டால் ஐம்பத்தாறு நாழிகைக்கு மேலாய் விட்டதே? இனிமேல் அவரை உயிரோடு காண முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/76&oldid=742467" இருந்து மீள்விக்கப்பட்டது