பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தையை கொஞ்ச காலத்துக்குமுன் புதிதாக உற்பத்திசெய் திருக்கிறார்கள். அவர்கள் உண்மைப்பெயரான "பறையன்" என்பதற்கு "பேசப்படப்பட்டவன்" என்பது அருத்தம். பூர்வீக இந்தியாவில் மற்றவர்கள் அவர்களைப்பற்றி பேசும் படியான பேர்பெற்ற மனிதர்களா யிருந்திருக்கவேண்டும். அந்த காரணத்தினால் தங்களை சுற்றுபறவிய நாகரீக கருத் துகளை தெரிந்துகொள்ளாதபடி அவர்கள் பிறரை விலக்கி யிருந்திருக்கவேண்டும். அதினால் அவாகள் பின்னடைந்தி ருக்கவேண்டும். எல்லா சுதேசிய உற்பத்தியான ஜனங்களும் இம்மாதிரி யாய்விட்டார்களென்று சரித்திரங்களால றிகிறோம். சீனதேசத்திலும் ஜப்பானிலும் அயல் நாட் டாரோடு ஜனங்கள் சம்மந்தப்படாதிருக்க விரும்பியகாலமு மிருந்தன. இந்துதேசத்திலேயே ஐரோப்பியா வாதபோது ஏதாவது ஒன்றை யிழக்கக்கூடியவர்கள் அவாகளை நெருங்க வில்லை. மிகவும் இழிவான ஸ்திதியிலிருந்த "பறையர்கள்" வேலைக்காராகளாக அவர்களிட மமைந்தார்கள். அப்படி யில்லாமல் கலவிக்கு சுதந்திரரா யிருந்த பிராமணரோ படிப்பு விஷயங்களை பிடித்துகொண்டு எஜமானாக ளாகி விட்டார்கள்.

இன்னும் சொந்தத்தில் நான் ஒன்றும் சொல்லாமல், ஜென்மம் சொத்தின் உற்பத்தியைக் கண்டுபிடிக்க அதிக கஷ்டப்பட்டவரும் நினைத்தவரும் அறிவை செலுத்தின்வருமான திருவனந்தபுறம் ஐகோாட் ஜட்ஜி ராமன் தம்பி என் பவர் எழுதிய ஜென்மி குடியன் கம்மிட்டி ரிபோர்ட்டு முக வுரையிலிருந்து சிலவற்றை சொல்லுகிறேன். அவர் தன்னிட விசாரணையில் சந்தர்ப்பவசமாய் பரையர்களையும் அன் னவர்போன்றவர்களையும் குறித்து எழுதியிருக்கிறார். இந்தி யாவின் வடமேற்கு மகாணங்களிலிருக்கும் பிராமணர்களைப்