பக்கம்:ஆத்மஜோதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

ஆத்மஜோதி

நாவலர் ஐயாவினுடைய இலக்கணச் சுருக்கம் படித்து, நன்னூல் காண்டிகையுரை படித்து, நன்னூல் விருத்தியுரை படித்து தொல்காப்பியம் படித்தல் மரபு. தொல்காப்பியம் என்று சொன்னலே ஒரு பயம். இப்படி ஒரு காலம். கி.வா.ஜ. அவர்கள் தொல்காப்பியத்தை இலக்கண நூலாகப் பாராது தமிழர்வாழ்வு என்ற மூறையிலே சில பிரசங்கங்களைச் செய்தார்கள். அப் பிரசங்கங்களை ‘ஹனுமான்’ என்ற பத்திரிகையிலே வாரந்தோறும் எழுதி வந்தார்கள். இதைப் படித்தவர்கள் மனதிலே தொல்காப்பியத்தைப் பற்றியிருந்த பயம் நீங்கியது.

திருமுறைகள் என்றால் அது ஓதுவார்களுக்குத்தான் சொந்தமானது. பொதுமக்கள் படிக்கமுடியாதது என்றொரு காலம் இருந்தது. யாரும் மனந் துணிந்து திருமுறைப் பாடல்களுக்கு உரை எழுதுவதே கிடையாது. அங்ஙனம் யாராவது உரை எழுதினாலும் அச் செயல் பெரிய பாதகமாகக் கருதப்பட்டது. திரு. கி.வா.ஜ. அவர்கள் திருமுறை மலர்கள் எழுதத் தொடங்கினர்கள். பன்னிரண்டு திருமுறைகளுக்கும் பன்னிரண்டு திருமுறை மலர்கள் வெளிவந்தன திருமுறைகளை விரும்பிக் கற்போர் தொகை பெருகியது.

சிறுகதைப் பாணியிலே செய்யுட் பொருட்களை விளக்கிச் செல்லும் வகை அவர்களுக்கே அமைந்ததொரு தனிச் சொத்தாகும்.

'நம்பு பாமாலையாலே நரருக்கின்றமுதம் ஈந்தான்
என்று கம்பன் பாவைப் புலவர் ஒருவர் பாராட்டியுள்ளார் இதே கருத்து திரு. கி. வா. ஜ. அவர்களுக்கும் நூற்றுக்கு நூறு பொருத்தமாகும். அவர்களுடைய எழுத்திலே அன்பு ஊறும்; அருள் பெருகும்; பக்தி மணக்கும். அவர்களுடைய எழுத்தில் புதுமை பொலியும். பழமையைப் புதுமையாக்கி பொதுமக்களை யெல்லாம் பழமைக்கு அழைத்துச் சென்று பழமைக்கும் புதுமைக்கும் பாலம் போல அமைந்தவர்களாவர். இலக்கியங்களைத் தமிழ்க் கண் கொண்டு பார்ப்பவர்களும், இருக்கின்றார்கள். பக்திக் கண் கொண்டு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். எக் கண் கொண்டு பார்த்தாலும் இவர்களுடைய எழுத்தைக் கண்டு அதில் தமது மனதைப் பறி கொடுக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

உ. வே. சாமிநாத ஐயர் அவர்களால் தொடங்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/7&oldid=1544430" இலிருந்து மீள்விக்கப்பட்டது