பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 105

ராஜாராமன் சிரித்தான். அவன் சிரிக்கிறதைப் பார்த்துவிட்டு 'என்ன தம்பி சிரிக்கிறீங்க என்று கேட்டார் பத்தர். -

'ஒண்ணுமில்லை! இந்த ஜஸ்டிஸ் பார்ட்டிக்காரங்களை நெனைச்சேன். சிரிப்பு வந்தது. ஆசை, பிரியம் எல்லாம் இந்தத் தேசத்துச் சங்கீதம், இந்தத் தேசத்து வீணை, இந்தத் தேசத்துச் சாப்பாடு, இந்தத் தேசத்துக் கோவில் குளம் எல்லாத்து மேலேயும் இருக்கு. விசுவாசம் மட்டும் இந்தத் தேசத்து மேலே இல்லே. விசுவாசத்தை மட்டும் வெள்ளைக்காரன் மேலே அடகு வச்சுட்டாங்க போலிருக்கு! இந்த நாகமங்கலம் ஜமீன்தாரும் அப்பிடித்தான். இல்லையா பத்தரே...?'

'மதுரத்துக்கும் அது பிடிக்காது தம்பி!'

'பிடிக்காமேதான் போயிருக்கா?"

கொள்கை வேறே, கலை வேறே. அங்கே போறதுனாலே தன் கொள்கையை அது விட்டுப்பிடும்னு மட்டும் நினைக்காதீங்க. '

'நான் ஏன் நினைக்கப் போகிறேன். நினைக்கிறத்துக்கு நான் யாரு...?'

அவனுடைய உள்ளடங்கின கோபத்தைப் புரிந்து கொண்டு பத்தர் சிரித்தார். காரணம், அந்தக் கோபம் மதுரத்தின் மேல் இவன் கொண்டுவிட்ட பிரியத்தின் மறுபுறமாயிருப்பதை இவர் புரிந்து கொண்டதுதான். உதாசீனம் உள்ளவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். கோபம் வராது. மதுரத்தின் மேல் அவனுக்கு வெறுப்பு இல்லை, கோபம்தான் வருகிறது என்பது தெரியும் போதே அவருக்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் திரும்பத் திரும்ப அவளைப் பற்றியே பேசியதிலிருந்தும் அவன் மனதில் அவள் இருப்பதையே புரிந்து கொள்ள முடிந்தது. z