பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9

நாள்தோறும் பார்த்துப் பார்த்து வேதனையடைந்து கொண்டிருந்தவனுக்குக் காந்திராமனின் மரணச் செய்தி இன்னொரு பேரிடியாயிருந்தது.

பதவிகளையும் சுயநலங்களையும் துச்சமாக மதித்த கடைசிப் பெரிய மனிதனும் இன்று பாரத நாட்டிலிருந்து மறைந்து விட்டான்! ஒரு வாரத்திற்கு முன்புதான் தேச நலனில் அக்கறை கொண்டு காந்திராமன் சத்திய சேவா சிரமத்திலிருந்து அனுப்பியிருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்தேன் அதில் ஓர் அறிக்கை படைபலத்துக்கு எதிரே சத்தியாக்கிரகத்தாலும், அகிம்சையாலும் வென்ற செக்கோஸ்லோவாக்கியாவைப் பற்றியது. 'செக் நாட்டில் காந்தியம் வெல்கிறது - என்ற தலைப்பில் காந்திராமன் அனுப்பியிருந்த அந்த அறிக்கையில், 'ஆக்கிரமித்த வர்களுக்குத் தோல்வி; ஆக்கிரமிக்கப்பட்டவர்களுக்கு மாபெரும் வெற்றி இது - என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு அறிக்கை நாடு முழுவதும் தீயாகப் பரவிக் கொண்டிருக்கும் மாணவர் அமைதியின்மையைப் பற்றியது. நாடு போகிற நிலை பற்றி இந்த இரண்டாவது அறிக்கையில் மிகவும் கவலை தெரிவித்திருந்தார் காந்திராமன்.

அந்த உருக்கமான அறிக்கைகளிலிருந்து பெற்ற ஆறுதலை இன்று நள்ளிரவு இந்த வேளையில் இழக்கிறேன் நான் நாயுடுவின் குரல் என்னை விரட்டுகிறது. . . . "

'என்னங்க... நியூஸ் எதினாச்சும் உண்டுங்களா?"

'உண்டு! அவசியம் பிடி எடிஷன்லியாவது வந்தா

கணும், காந்திராமன் போயிட்டார். கடைசித் தந்தியிலே

மீதியிருக்கிற இடத்திலியாவது போட்டாகணும்...'

நாயுடுவின் முகத்திலும் ஒரு கலக்கம் நிழலிட்டது.

'இப்பவே மணி ண்ணரையாச்சு மானோ ஆபரேட்டரும் வீட்டுக்குப் போயிட்டானே?"