பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஆத்மாவின் ராகங்கள்

'சரி பேசலே, அப்புறம்?...'

'நீங்க கொடுத்து வச்சிருக்கறதைவிட அதிகமாகவும் நான் உங்களுக்காக செலவழிப்பேன். பக்தி செய்கிறவர்கள் தனக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டுமென்பதைத் தெய்வங்கள் முடிவு செய்ய உரிமையில்லை...'

'முடிவு செய்ய உரிமையில்லை என்றாலும், கவலைப் பட உரிமை உண்டல்லவா மதுரம்?’’

நான் ஒருத்தி இருக்கிற வரை உங்களுக்கு ஒரு கவலையும் வராது. வர விடமாட்டேன். '

'வேடிக்கைதான் போ! பக்தர்களின் கவலையைப் போக்கும் தெய்வங்களைப் பற்றித்தான் இதுவரை கேள்விப் பட்டிருக்கிறேன். தெய்வங்களின் கவலைகளையே போக்க முடிந்த பக்தர்களைப் பற்றி இப்போது நீதான் சொல்கிறாய் மதுரம்...!"

அவள் மறுமொழி கூறாமல் புன்னகை பூத்தாள்.

டு)

மகாத்மா காந்தி லண்டனுக்கு வட்ட மேஜை மகாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. சமரசமோ, உடன்பாடோ எதுவும் சாத்தியமில்லாமல் போயிற்று. மகாத்மா லண்டனில் இருந்த போதே இந்தியாவில் காங்கிரஸ் இயக்கத்தை ஒடுக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்யத் தொடங்கிவிட்டது. லண்டனிலிருந்து திரும்பிய மகாத்மா பம்பாய் ஆசாத் மைதானத்தில் பேசிய பேச்சின் சுவடு மறையுமுன்னே, நாட்டில் அங்கங்கே தேசியவாதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். -