16 ஆத்மாவின் ராகங்கள் எஸ்டேட் மரங்களில் காகங்கள் கரையத் தொடங்கி விட்டன. கிழக்குப் பக்கமிருந்து கடற்காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது. - o . . . .
'மதுரையில் யாரோ முக்கியமானவங்க... செத்துப் போயிட்டாங்களாம். ஃப்யூனெரலுக்கு அட்டண்ட் பண்ண மந்திரிகளும், பிரமுகர்களுமா இப்பவே ஏகப்பட்ட வெயிட்டிங் லிஸ்ட் டெல்லி நைட் பிளேன்ல வேற ரெண்டு யூனியன் டெபுடி மினிஸ்டர்ஸ், நாலு எம். பி. எல்லாம் வராங்க, மார்னிங் மதுரை பிளேன்ல அவங்களுக்கு ப்ரயாரிடி வnட் அரேஞ்ஜ் பண்ணனும். இங்கேயே வெயிட்டிங் லிஸ்டிலே பத்துப்பேர் இருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலே, சார் - என்று மன்னிப்புக் கோரினார், ஏர்லைன்ஸ் புக்கிங் அலுவல்ர். வீட்டுக்குப் போய்க் காரிலேயே புறப்படுவதென்று முடிவு செய்தேன். காரில் காலை பதினொரு மணிக்காவது மதுரை போய்ச் சேரலாம்; மதுரையிலிருந்து ஒரு மணி நேர டிரைவ் தான். எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்கு ஆசிரமத்தில் இருக்கலாம்.
மறுபடியும் ஆபீஸுக்கு வந்து சில விவரங்களை எழுதி மேஜையில் வைத்துவிட்டு, வீட்டுக்கு ஃபோன் செய்தேன். ரொம்ப நேரம் மணி அடித்துக் கொண்டிருந்தது. தூக்கக் கிறக்கத்தோடு டெலிபோனை எடுத்துப் பேசினாள் மனைவி.
'ராமு இருந்தால் உடனே காரை எடுத்துக் கொண்டு இங்கே வரச் சொல். அவசரமாக மதுரை போகணும்'- என்று என் மூத்த பையனைக் காருடன் வரச்செய்யும் படி மனைவியிடம் கூறினேன். டெலிபோனை வைத்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது,
'மதுரை போlங்களா, சார்? என்ன விசேஷ மோ? என்று கண்ணைக் கசக்கிக் கொண்டே எதிர்ப்பட்ட நைட் ரிப்போர்ட்டரிடம் மேஜையில் கிடந்த பேப்பரை எடுத்துச் சுட்டிக் காட்டினேன். அதோடு, 'மிஸ்டர் நாராயணசாமி!