பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244 ஆத்மாவின் ராகங்கள் அனுபவிக்கவேண்டியதை அனுபவிக்கும் எல்லைக்கு

இப்போது நாம் வந்திருக்கிறோம். நோக்கங்களுக்காகப்

போராடும்போது இருந்த ஒற்றுமை பிரயோஜனங்களுக்காக

நெருங்கும்போது இருக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும். நாட்டுக்கு நான் எதைச் செய்ய வேண்டுமோ அதை

இந்த ஆசிரமத்தின் மூலம் தாராளமாகச் செய்வேன். பதவிகள் ஒரு வேளை சேவை செய்வதில் எனக்குள்ள விநயத்தையும்,

தாகத்தையும் போக்கினாலும் போக்கிவிடலாம். தயவு செய்து

என்னை விட்டுவிடுங்கள்' என்றான் அவன். பிருகதீஸ்

வரனும் அதே மனநிலையில் தான் இருந்தார்.

Yk × - ★

1948-ம் வருடக் கடைசியில் நடந்த தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமை யாவுக்கும், புருஷோத்தமதாஸ் தாண்டனுக்கும் போட்டி கடுமையாயிருந்தது. தாண்டன் தோற்றார். பட்டாபி ஜெயித்தார். பிருகதீஸ்வரனோ, அவனோ அந்தக் காங்கிரஸ் அக்குப் போகவில்லை. அடுத்த ஆண்டு சென்னையில் குமாரசாமி ராஜாவின் மந்திரிசபை ஏற்பட்டது. -

இந்தியா முழுமையான குடியரசு நாடாகிய 1950 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நாஸிக்கில் கூடிய காங்கிரஸின்

போது - பிருகதீஸ்வரன் உடல் நலங் குன்றியதால் புதுக்கோட்டைக்குப் போய் குடும்பத்தோடு தங்கி விட்டார். உள்ளுர்ப் பிரமுகர்களும், சக தலைவர்களும்

வற்புறுத்தியதால், ராஜாராமன் தட்ட முடியாமல் நாஸிக் காங்கிரஸ் டுக்குப் போய் வந்தான். நாஸிக் காங்கிரஸில் தாண்டன், கிருபளானி, சங்கரராவ் தேவ் ஆகிய மூவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். போட்டி யிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாகக் கட்சியில் உட்பிளவுகளும் அதிகமாகத் தொடங்குவதாகவே உணர்ந்தான் அவன். அந்தக் காங்கிரஸில் தாண்டன் வெற்றிபெற்றார். ஜவஹர்லால் நேருவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் கட்சிக்கும் - மந்திரி