பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆத்மாவின் ராகங்கள் இடம் எந்த நேரமும் பூட்டத்திறக்க வசதியாக இருந்தது. மாதம் பத்து ரூபாய் வாடகை. அதை நண்பர்கள் பங்கிட்டுக் கொண்டு கொடுத்துவர ஏற்பாடாகி இருந்தது. புது இடத்தில் முதல் முதலாக நடக்கும் நள்ளிரவுக் கூட்டம் இதுதான். பின்புறம் இந்த வாசகசாலையின் மாடி ரூமை ஒட்டினாற்போல் ஒரு சின்ன மொட்டை மாடி! அடுத்துப் பக்கத்திலுள்ள ஒண்ணாம் நம்பர் சந்தில் இருக்கும் மாடி வீட்டின் அறை ஒன்று இந்த மொட்டை மாடியை ஒட்டி இருக்கிறது. ரொம்ப நேரம் வரை அந்தப் பக்கத்து மாடியறையிலிருந்து யாரோ சுகமாக வீணை வாசித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. ஃபண்டாபீஸ் மணி இரண்டடித்தபின் அந்த வீணை ஒலியும் நின்று போயிற்று. ராஜாராமன், அந்நியத் துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் போன்றவற்றைப் பற்றி ஒரு திட்டம் போட்டு, நண்பர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். எதை எப்படி எங்கெங்கே செய்வதென்பது பற்றி நண்பர்கள் விவாதித்தனர். உப்பு சத்தியாக்கிரகம் அப்போதுதான் நாடெங்கும் நடந்து தலைவர்கள் கைதாகியிருந்தனர்.

கள்ளுக்கடை மறியலைச் செல்லூர்லியாவது திருப்பரங்குன்றத்திலயாவது நடத்தனும், - என்றார் முத்திருளப்பன். அந்நியத் துணிக்கடை மறியலை மேலக் கோபுர வாசலில் வைத்துக் கொள்வதா, கீழ்ச் சித்திரை வீதியில் அம்மன் சந்நிதியருகே வைத்துக் கொள்வதா என்பது பற்றி ராஜாராமனுக்கும் குருசாமிக்கும் அபிப்ராய பேதம் இருந்தது. பல பெரியவர்கள் ஏற்கெனவே நடத்தியிருந்த இந்த மறியல்களை அவர்கள் மீண்டும் நடத்த எண்ணினர்.

காந்தி கைதானதால் எதையாவது செய்து, தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தார்மீகக் கோபத்தைக் காட்ட வேண்டும் என்பதில், அவர்களுக்குள் அபிப்ராயபேதம் எதுவும் இருக்க வில்லை. எப்படிச் செய்வது, எங்கே செய்வது என்பதில் தான் அபிப்ராயபேதம் இருந்தது. குருசாமியும், முத்திருளப்பனும் ராஜாராமனைவிட மூத்தவர்கள். ராஜாராமனிடம் துடிப்பும், வேகமும், ஆவேசமும் இருந்தன. குரு