பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஆனந்த முதல் ஆனந்த வரை திடீரென வண்டியில் இருந்து இறங்கி வேறு பெட்டிக்கு மாறப்போனார், அதற்குள் இரெயில் புறப்பட்டுவிட்டது. அவர் பாவம்-அந்தச் சிறு வயதில் ஒன்றும் செய்ய முடியாது 'ஓ'வெனக் கதறினார். அனைவரும் எட்டிப் பார்த்தோம். ஆசிரியர்கள் அவர் பெயர் சொல்லி அழைத்தார்கள். அந்த ஆரவாரத்தையும், இளம் பிள்ளை அவ்வாறு அழுவதையும் கண்ட கார்டு வண்டியை மறுபடியும் நிறுத்தினார். வந்த ஆசிரியருள் ஒருவர் இறங்கி அவரை இழுத்து வண்டியில் ஏற்றிக் கையால் முதுகையும் பதம் பார்த்தார் என நினைக் கிறேன். எப்படியோ அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவர் பெயர் எனக்கு நினைவில்லை. முடிவாக வாலாஜாபாத் வந்து சேர்ந்தோம். அன்று மாலை ஐந்து மணிக்குமேல் நான் அனைவ ரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கம்பாக்கம் வீட்டுக்குச் சுென்றேன். அன்னையிடம் நசன் பரிசுபெற்ற நூல்களைக் கொடுத்தேன். அவர்கள் அப்படியே என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள். மறுநாள் ஓர் ஆசிரியர் வந்து நான் நடித்த சிறப்பையும் சென்னையில் பிறர் புகழ்ந்த சிறப்பையும் கூறும்போது அவர்கள் மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளுக்கு இலக்கிய மாக இருந்தது என்பதைப் பின்னர் உணர்ந்தேன். இவ்வாறு அங்கு இந்து மத பாடசாலையில் கற்ற காலத் தில் பலவாறு நல்ல முறையில் ப்ேசவும் நடிக்கவும் பயிற்றப் பெற்றேன். ஒரு காலத்தில் நான் பேசும் போது தலைமை வகித்த டாக்டர் பி. வரதராசலு நாயுடு அவர்கள் என் பேச்சின் திறம் கண்டு தான் அணிந்திருந்த மாலையை எனக்குச் சூட்டிப் புகழ்ந்தார்கள். நான் அங்குப் பயின்ற காலத்தில் பெற்ற அனுபவமே பிற்காலத்தில் மேடைகளில் பேசும் வழக்கத்தை எனக்கு ஏற்படுத்தியது என்னலாம். இன்றும் அப்பள்ளியை மறவாமல் அடிக்கடி சென்று நிகழ்ச்சி களில் பங்கு கொண்டு மகிழ்கிறேன்.