பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - - ஆனந்த முதல் ஆனந்த வரை சிராப்பள்ளிக் குன்றுடையானையும், திருவரங்கத்துப் பள்ளி கொண்டானையும் ஆனைக்கா அண்ணலையும் கண்டு வணங்கினேன். பிறகு நண்பகல் உணவுக்குப் பின் ஒரு சத்திரத்தில் இடம்கேட்டுத் தங்கினேன். அன்றும் மறு நாளும் எப்படியோ பொழுதினைக் கழித்தேன். திரும்பும் போது ஒருநாள் தில்லைக்கு வந்ததாக நினைவு. எப்படியோ நான்கைந்து நாட்கள் சுற்றித் திரிந்துவிட்டு, பிறகு வாலாஜாபாத் வந்து சேர்ந்தேன். சேர்ந்த அன்று முறை யாகப் பள்ளிக்குச் சென்றேன். ஆனால் அதற்கு முன்பே என் வீட்டிலும் அவர்கள் வீட்டிலும் என்ன நடை பெற்றிருக்கும் என்று அறிய அவாவிற்று என் உள்ளம். நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்கக் கேட்க என் உள்ளம் நைந்தது. எனது மண இதழைக் கொண்டுசென்று என் அன்னை யிடம் நண்பர் தந்து விளக்கியதும் அன்னையார் 'ஒ'வெனக் கதறி அழுதனர். வீடே பிண வீடாக மாறிய நிலையில் இருந்தது. யாவரும் வந்து விசாரித்தனர். என் பெரிய அன்னையும் பெரிய தந்தையும் எவ்வளவோ கூறியும் மற்ற வர்கள் தேற்றியும் என் அன்னையார் அமைதியுறவில்லை" பலர் சிவானந்தம் (அப்படித்தான் என்னை ஊரில் உள்ளவர் கள் அழைப்பார்கள்) அவ்வளவு துணிச்சலாகச் செய்ய மாட்டான். ஏதோ இருக்கும் என்று கூறித் தேற்றியும் அன்னையார் கேட்கவில்லை. உடனே குணமங்கலத்’துக்குப் புறப்பட்டுச் சென்று மணத்தைத் தடுக்கவேண்டும் என்று வாதாடினர். என்னை மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தி னாலும், அவ்ர்கள் தம் குலத்திலேயே-மரபிலேயே எனக்குப் பெண்தேடவே நினைத்தனர். நான் வேற்றுச் சாதியிலே வேறுபெண்ணை மணப்பது என்பது அவர்களோ மற்றுள்ள ஊரார்களோ விரும்பாதது. அவ்வளவு வைதீக எல்லை மீறாத மக்கள் வாழ்ந்தது என் ஊர். எனவே எல்லாரும்