பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ஆனந்த முதல் ஆனந்த வரை அப்பட்டத்தை வேண்டாம் என்று கூற விழைந்தேன். தாசில் தார் அவர்களிடம் கூறினால் அவர் என் சொல்லை என்னிடம் கொண்ட அன்பின் காரணமாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என அறிவேன். எனவே, மறுநாளே சென்னைக்கு வந்தேன். மாவட்டக் கலெக்டர் திரு. செட்டுர் அவர்களைக் கண்டேன். என்னைக் கண்டதும் வரவேற்று அவர்களும் அச்செய்தியைச் சொன்னார்கள். நான் அதுபற்றிப் பேசவே வத்திருக்கிறேன் என்றும் எனக்கு அப்பட்டம் எவ்வாற்றானும் தேவை இல்லை என்றும் கூறினேன். அவர்கள் ஏற்குமாறு வற்புறுத்தினர். நான் வேண்டாமென்றும் மீறித் தரப்பெறுமாயின் ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கப்பெறும் என்றும் மேலும் எக் கூட்டத் துக்கும் தொடர்ந்து வரமாட்டேன் என்றும் சொன்னேன் அவ்வாறு அப்பட்டத்தைத் திருப்பித்தரின் அதைக் கவுரவக் குறைவாக அன்றைய ஆங்கில அரசாங்கம் எண்ணிற்று. பிற்காலத்தில் பலர் அப்பட்டங்களை உதறித் தள்ளினர். சிலர் இன்றும் அந்த அடிமைச் சின்னங்களை அணிந்து கொண்டு பெருமைப்படுகின்றனர். நான் அன்று மறுப்பேன் என்று கூறிய ஒன்றை நன்கு உணர்ந்த செட்டுர் அவர்கள் என் பெயரை அரசாங்கத்துக்கு அனுப்பவில்லை என்று உறுதி அளித்தார். மிக்க மகிழ்ச்சியோடு நான் காஞ்சிபுரம் திரும்பி நேரே தாசில்தார் வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறினேன். அவர் உரிமையோடு என்னைக் கடிந்து கொண்டார். எனினும் அதுபற்றி மேலே அவர் ஒன்றும் பேசவில்லை. இதை அறிந்த என் நண்பர்கள் பலர் பின்னால் என்னைக் கடிந்து கொண் டார்கள். நான் எதற்கும் செவிகொடாது எப்போதும் போல அன்னைத் தமிழுக்கும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் என்னால் ஆன பணிகளைச் செய்து கொண்டு காலம் கழித்து வந்தேன். போருக்கு இடையில் நாட்டில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அண்ணல் காந்தி அடிகளார் இந்திய நாட்டை