பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 261 நேரடியாகப் போரில் ஈர்ப்பது ஆங்கில ஆட்சிக்குப் பொருந் தியது ஆகாது என விளக்கினர். அவர்கள் இவர் தம் பேச் சினைக் கேட்கவே இல்லை. காங்கிரஸ் மகாசபை பல வகை யில் மாற்றுச் செயலாற்ற முற்பட்டது. அதனால் சில தலை வர்கள் சிறையில் தள்ளப்பெற்றனர். நாடு முழுவதும் கொந் தளிப்பு ஏற்பட்டது. மாநில மத்திய அரசாங்கச் சட்டசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் மாவட்ட நகர் மன்றக் கழகங்களும் எதிர்ப்புக் காட்டும் முகத்தால் உடனே இராஜி நாமா' செய்து வெளியேற வேண்டுமென்றும் திட்டம் தீட் டினர். அதன் விளைவால் நாடெங்கும் காங்கிரஸ் ஆட்சியினர் பதவியினை இராஜிநாமா செய்து வெளியேறினர். வெளி யேறு முன் கண்டனக் கூட்டங்களில் தீர்மானம் இட்டு: ஆங்கிலேயர் தம் அடாத செயலைக் கண்டித்து வெளியேற வேண்டும் என்ற முடிவும் குறித்தனர். நாட்டுத் தலைவர்களும் அவையாளரும் அவ்வாறே செய்தனர். எனது செங்கற்பட்டு மாவட்டக் கழகமும் அவ்வாறே செயல்படத் திட்டமிட்டு, கூட்ட நாளும் குறித்தது. நாங்கள் எதிர்க் கட்சியில் இருந்ததை முன்னரே குறித்துள்ளேன். எங்கள் தலைவர் திரு. சண்முகம் பிள்ளை அவர்கள் என்னை அந்தக் கூட்டத் தில் காங்கிரஸ்காரர் வெள்ளையனை வெளியேறு' என்று தீர்மானம் இட்டுத் தாங்கள் இராஜிநாமா செய்ய இருப்ப தையும் எதிர்க்கட்சிக்காரர்களாகிய நாங்கள் அதை எதிர்க்க வேண்டுமெனவும் அவ்வாறு எதிர்த்தால் தொடர்ந்து நியமனம் செய்யப்பெறும் அவையில் நாங்களெல்லாம் இடம் பெறுவோம் எனவும் அதற்காக அரசாங்கம் சட்டம் தீட்டி யுள்ளதெனவும் எழுதியிருந்தார். எனினும் அவ்வாறு செய்ய என் உள்ளம் இடம் தரவில்லை. அண்ணல் காந்தி அடிகளார் போன்ற பெருந்தலைவர்களெல்லாம் அல்லல்பட்டு ஆற்றாது நாட்டுக்காகப் பாடுபடும் வேளையில் நமக்குப் பதவி எதற்கு? எனவே ஒதுங்கி நின்றேன்.