பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 285 வாழ்க்கையும் ஊர் வாழ்க்கையும் ஒத்துவரா நிலையில் சென்னைப் பச்சையப்பர் கல்லூரியின் தமிழாசிரியர் தேவை பற்றிய விளம்பரம் கண்டேன். அதற்கென விண்ணப்பம் செய்ய நினைத்தேன். எனினும் அதற்குரியார் யாரையும் நான் அறியேன் ஆதலாலும் அதற்குரிய வகையில் என்னை ஆற்றுப்படுத்தி வழிகாட்டுவார் யாரும் இல்லை என்ற நிலை யாலும் செய்வதறியாது திகைத்தேன். சென்னைக்கு ஒரு திங்களில் சுமார் இருபது முறை சென்று வந்திருப்பேன். எனினும் அந்தச் சூழலுக்கிடையில் நான் இறைவனை முற்றும் நம்பிய காரணத்தால் அமைந்த சூழலே எனக்கு உரியவரிடம் ஆற்றுப்படுத்தியது. அதனாலேயே ஒருவருக்கு என விளம்பரம் செய்திருந்த போதிலும் மூவர் அதற்கெனத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். திரு. அ. ச. ஞானசம்பந்தர், திரு. க. அன்பழகர், நான் ஆகிய மூவரும் 1944 சூன் இறுதி வாரத்தில் ஒருவர் பின் ஒருவராகத் தமிழ்த் துறையில் விரிவுரையாளர்களாகச் சேர்ந்தோம், அதே வேளையில் புலவர் அன்பு கணபதி அவர்களும் பயிற்றாளராகப் பணி ஏற்றார். எங்கள் அனைவரையும் அத்துறைத் தலைவராகிய மோசூர் கந்தசாமிமுதலியார் அவர்கள் அன்புடன் ஏற்றுப் புரந்தநிலையை இன்று நினைத் தாலும் உள்ளமும் உடலும் ஒருசேரச் சிலிர்க்கின்றன. டாக்டர் மு. வரதராசனார், டாக்டர் மொ. அ. துரை அரங்கனார் போன்ற பெருமக்களோடு கலந்து பணியாற்றும் பொறுப்பினை மேற்கொண்ட நிலையில் இறைவனையும் அன்னையையும் பச்சையப்பரையும் உளத்தால் போற்றி வாழ்த்தினேன். ஏதோ ஒரு வேகம் உந்த, மாற்றுப் பணிக் கென 75.5-125 ரூபாய் ஊதியத்தில் பச்சையப்பரில் நான் கால் வைத்த அந்த நாளில் எனது ஒய்வு நாள் வரையில் தொடர்ந்து இதே கல்லூரியில் பணியாற்றுவே னென்றோ, தொடர்ந்து பல வகையில் உயர்ந்து வளர்வேனென்றோ,