பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 297 கள் தோன்றாத காலம். சென்னை நகர மேற்கு எல்லையே பச்சையப்பர் கல்லூரியோடு முடிவடைந்த காலம். அமைந்த கரை ஊராட்சியாக இருந்த காலம். எனவே எனக்கு உடன் தங்க வீடு கிடைக்கவில்லை. ஊரிலும் நிலங்களைப் பார்வையிட வேண்டி இருந்தது. முன் பகுதியில் கூறியபடி திரு நடேச முதலியார் அவர்களே ஊர் விவகாரங்களையெல் லாம் பார்த்து வந்தார். எனவே இடையில் ஒரு மாதம் (சூலை) செங்கற்பட்டில் இரெயிலடிக்கு அருகிலேயே ஒரு வீட்டில் சிறுபகுதியை வாடகை எடுத்து, அங்கிருந்து, இரெயிலில் வந்து சேர்ந்தேன். காலை 7 மணிக்குப் புறப்பட்டு மாலை 7 மணிக்குத் திரும்பச் செல்ல வேண்டும். குழந்தை மங்கையர்க்கரசி மூவாண்டு நிரம்பப் பெற்றமையின், மயிலை சேந்தோமிலுள்ள ஒரு விடுதியில் குழந்தைகள் வகுப்பில் சேர்த்து, அங்கேயே தங்கவும் ஏற்பாடு செய்தோம். நாங்கள் சென்னை வந்த பிறகும் இரண்டாண்டுகள் அங்கேயும், பின் அங்கே சைவ உணவு நீங்கப் பெற்றமையின் ஓராண்டு தியாகராயநகர் வித்யோதயாவிலும் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தோம். செங்கற்பட்டிலிருந்து ஒரு மாதம் வந்து கொண்டிருந்த போது, இங்கே இடம் தேடவும் முனைந்தமையின், பவழக் காரத் தெரு கோடியில் ஒரு மேல்மாடி இடம் கிடைத்தது. அப்போது அதற்கு இருபது ரூபாய் வாடகை (இப்போது இரண்டாயிரத்துக்கு மேலும் இருக்கலாம்). அங்கிருந்து கடற்கரை இரெயில் நிலையம் வந்து சேத்துப்பட்டில் இறங்கிக்கல்லூரிக்கு வருவேன். டாக்டர்மு. வரதராசனார்: டாக்டர். துரைஅரங்கனார், கல்லூரி எழுத்தர் பாஷ்ய ராமாநுஜம் ஆகியோர் முயற்சியால் கல்லூரிக்கு அருகிலேயே வைத்திய நாதமுதலித் தெருவில் ஒருதனி வீடே கிடைத்தது. 1949இல் அமைந்தகரையில் சொந்தமாக வீடுகட்டிக் குடிபுகும் வரையில் அங்கேயே குடிஇருந்தோம். நல்ல நண்பர்கள் சூழ நாட்கள் கழிந்தன.