பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 ஆனந்த முதல் ஆனந்த வரை வெற்றி பெற்றார், ஆனால் அதே நிலைதான் இன்றும் உள்ளது. தமிழ், பிற தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இந்தி, பிரஞ்சு, ஜர்மன் போன்ற மொழிகளுடன், ஒன்றாகவே தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றது. பல்கலைக் கழகங்களும் அரசாங்கமும் நினைத்தால் இன்றே தமிழைக் கட்டாயமாக்கலாம், மனம் இருந்தால்தானே! எங்கோ சென்றுவிட்டேன். என் தமிழ்ப்பித்து அப்படி ஈர்க்கின்றது. மன்னியுங்கள். மூன்று நாள் அலிகாரின் மாநாட்டில் பங்குகொண்ட தோடு, நகரினையும் சுற்றுப் புறங்களையும் கண்டோம். அலிகாரி பூட்டுக்குப் பேர்போன இடமல்லவா! பல பூட்டுக் கடைகளைக் கண்டோம். சில பூட்டுக்கள் வாங்கினோம். நான் அது முதல் எங்கள் பள்ளி, கல்லூரி ஆகியவற்றிற்கு வேண்டிய நல்ல பூட்டுகளை அங்கிருந்தே வரவழைத்துக் கொள்வேன். இன்னும் அலிகார் சுற்றுப்புறங்களையும் பசுமை நிறைந்த கோதுமைப் பயிர்களையும் பிறவற்றையும் கண்டோம். பின் அங்கிருந்து குறுக்கே மதுரா என்னும் கிருஷ்ணன் பிறந்த வடமதுரைக்குச் செல்லத்திட்டமிட்டோம். எனவே மாநாடு முடிந்தவுடன் எங்களில் சிலர் திரும்பினாலும் நானும் இன்னும் ஒருசிலரும் மதுரைக்குச்சென்றோம். திரும்பு வதற்குத் தில்லியிலிருந்தே பதிவு செய்திருந்தமையின் நேர் பாதையில் உள்ள மதுராவில் இரெயிலைப் பிடிப்பதும் எளிதாக அமைந்தது. மதுரா நெருக்கமான ஊர்; தங்க நல்ல இடம் கிடையாது. நான் முன்பே, காஷ்மீர் சென்றபோது (1957) குடும்பத்துடன் மதுரை முழுவதையும் சுற்றிப் பார்த் திருக்கிறேன். எனினும் இப்போதும் மற்றவர்களோடு மதுரை யினையும் கண்ணன் இளமை நிலையில் காட்டிய காட்சி களையும் கண்டு, அன்று இரவே இரெயிலில் புறப்பட்டு ஐதரா பாத்துக்குக் கிளம்பினோம்.