பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் - 349 வந்தது. உடனே நான், எனக்கு அந்த இடம் புதியதாகை யால் யாரேனும் ஒருவரை இரயிலடிக்கு அனுப்பினால் உரிய இடத்துக்கு வருதல் நலமாகும் எனவும் எழுதினேன். குறித்தபடி ஒருநாள் இரவு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணி அளவில் பூனா போய்ச் சேர்ந்தேன். இரெயிலை விட்டு இறங்கி நடைபாதையில் சென்று கொண்டிருந்த போதே ஓர் இளைஞர் வந்து தாங்கள் S.S.C போர்டுக்குத் தானே போகிறீர்கள் என்று கேட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. நான் நீயராப்பா' என்று கேட்டேன். நான் அங்கே பணி புரிகின்றவன்; எங்கள் செயலர் தாங்கள் இந்த ரெயிலில் வருவதாகக் கூறி. என்னைச் சென்று அழைத்து வரச் சொன்னார். எனவே வந்தேன்' என்றார். என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்' என்றேன். அவர் ஒன்றும் சொல்லாது புன்னகை செய்தார். எப்படியாயினும் அவர் செயல் பாராட்டத் தக்கதாகவே இருந்தது. உடன் ஒர் ஆட்டோ'வில் சிவாஜி நகரிலுள்ள அந்த அலுவலகம் சென்றேன். எனக்கென மேல் மூன்றாம் தளத்தில் ஓர் அறை ஒதுக்கப் பெற்றிருந்தது. பக்கத்திலேயே குளியல் அறை. உடன் வந்தவர் தாங்கள் இந்த அறையில் தங்கிக் காலைக் கடன்களை முடித்து, குளித்து இருங்கள். நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன்' என்று சொல்லிச் சென்றார். நான் அனைத்தையும் முடித்து அமருவதற்கும் அவர் இட்டலி, வடை, காப்பியுடன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. மணி 9 இருக்கும். சிற்றுண்டி கொண்டேன். பத்து மணிக்குக் கூட்டம் என்றும் மற்றொருவர் பம்பாயிலிருந்து வருவார் என்றும் கூட்ட அறை எண் இதுவென்றும் கூறிச் சென்றார். 9-30 இருக்கும், பம்பாயிலிருந்து வயதான ஒரு அம்மையார் என் அறைக்குள் வந்தார். அவர்கள் என்னை முன்பு பம்பாய்க் கூட்டத்தில் பார்த்திருப்பதாகவும். தானே மற்றொரு தேர்வாளர் என்றும், நான் அங்கே இருப்பதைக்