பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 369 பொருளே குறிக்கோளாக இல்லாது சில வரையறுத்த பண் பாட்டு நெறி பற்றி அவர்கள் வாழ்வதையும் குறிப்பிட்டார். இவ்வாறு வெகுநேரம் பலவற்றைப் பற்றிப்பேசி இருந்து உறங்கச் சென்றோம். மறுநாள் காலை சிங்கப்பூருக்கு அந்த அன்பரே தம் காரில் அழைத்து வந்து எனக்கென அமைந்த மாளிகையில் விட்டு வாழ்த்திச் சென்றார். அங்கே தமிழ்முரசு, நாளிதழைச் சிறக்க நடத்தி வரும் சாரங்கபாணி அவர்களும் டாக்டர் சங்கர் அவர்களும் (பச்சையப்பன் கல்லூரியின் பழைய பேராசிரியர் அனந்த நாராயணன் அவர்தம் மகனார்) வந்திருந்தார்கள். வேறுபல அன்பர்களும் கூட இருந்தனர். அன்று மாலை இராமகிருஷ்ண மடத்தில் பேசுவதெனவும் அடுத்த இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் பேச வேண்டும் எனவும் குறித்தனர். அதற்குள் மலாக்கா சென்ற செட்டியார் அவர்களும் வந்து சேர்ந்தார். நான் சிங்கப்பூர் வந்ததைக் கேட்டறிந்த இந்திய தூதுவர் ஜான் திவி அவர்கள் தொலைபேசியில் பேசி, மறுநாள் அவர்கள் வீட்டிற்கு விருந்திற்கு வரவேண்டுமெனக் கூறினார் கள். அப்படியே மறுநாள் சென்றபோது மகிழ்வோடு ஏற்று, போற்றி விருந்தளித்தனர். அவர்தம் துணைவியார் சிறந்த தமிழ்க் குடும்பத்தில் வந்தவராதலாலும் அவரும் தமிழ் நலம் பேணும் தன்மையராதலாலும் அங்கே தமிழ் மணம் வீசக் கண்டேன். பின் திரு. சங்கர் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு நாள் முமுவதும் அங்கேயே தங்கியிருந்தேன். நிகழ்ச்சிகள் முறைப்படி நடைபெற்றன. நான் வந்த பணி பற்றியும் பல வகையில் பலரிடம் நேர்முகமாகவும் குறிப்பாகவும் மறைமுகமாகவும் எல்லா இடங்களிலும் பேசிய படி இங்கேயும் பேசினேன். பலருடைய உள்ளக்கிடக்கை யினை அறிந்தேன். தமிழ் உள்ளம் சார்ந்த சாரங்கபாணி ஆ-24