பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 371 எல்லா அன்பரிடத்தும் பணிந்து அன்புடன் விடைபெற்றுக் கப்பல் ஏறினேன். ஏழாம் நாள் நேரே சென்னை வந்து சேர்ந்தேன். . சேர்ந்த இரண்டொருநாளில் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களிடம் நான் சேகரித்த குறிப்புகள் அனைத்தையும் தொகுத்து என் கருத்தினையும் எழுதித்தந்தேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். முதல்வருடன் கலந்து, தில்லியோடுமாண்புமிகு நேருவோடு பேசி மலேயா பல்கலைக் கழகத்தில் தமிழே இந்திய மொழியாகும் என அறிவித்தனர். என் பச்சையப்பர் கல்லூரி மறுநாள் திறந்தமையின் பழையபடி என் பணியினைத் தொடங்கினேன். 6. பத்திரிகைப் பணி பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய போதே, வேறுசில பொதுப்பணிகளையும் மேற்கொள்ளும் நிலை இருந்தது. ஒரு பகுதியாகிய பத்திரிகைத்துறையில் அக்காலத்தில் நான் ஆற்றிய பணியினைப் பற்றி எண்ணலாம் என எண்ணுகின்றேன், - - میر நான் காஞ்சியில் இருந்தபோது, தொடங்கி நடத்திய 'தமிழ்க்கலை இதழ் நான் அங்கிருந்தபோதே பல காரணங் களால்-சிறப்பாக போர்க் காலத்துத் தாள்விலை உயர்வு காரணத்தால் நிறுத்தப்பெற்றது. நான் வைத்திருந்த தமிழ்க்கலை அச்சகத்தையும் என்னுடன் சேர்ந்து பணி யாற்றியவருக்கு மதிப்பிட்டுத் தந்து வந்துவிட்டேன். அது பற்றியெல்லாம் இந்நூலின் முற்பகுதியில் விளக்கமாக எழுதி யுள்ளேன். ஆயினும் சென்னை வந்த பின் மீண்டும் அதைத் தொடங்கி நடத்தலாம் எனக் கருதினேன். அச்சகத்தின்