பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 ஆனந்த முதல் ஆனந்த வரை கல்லூரி மாணவர் மட்டுமன்றி, பிற கல்லூரி மாணவர் களும் பேச்சுப்போட்டி முதலியவற்றிற்கு இங்கே அழைப்பது உண்டு. அப்படியே பல்கலைக் கழகம் (அப்போது சென்னை மட்டும்தான்) மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டிகள் நடத்தும். அதில் மூன்று, நான்கு சுற்றுகள் நடைபெறும். தமிழில் கடைசிச் சுற்று, பச்சையப்பரிலேயே நடைபெறும். எனவே பல்கலைக் கழகச் சிறப்புப் பேச்சாளர் இந்த மண்டபத்திலே தேர்ந்தெடுக்கப்பெறுவர். இதில் ஆடவர், பெண்டிர் இருவரும் பங்கேற்று வெற்றி பெறுவர். சென்னைப் பல்கலைக்கழகம் எல்லாப்பாடங்களுக்கும் பயிற்றும் ஆசிரியர்களுக்குப் புதுவகையிலும் தெளிந்த முறை யிலும் பயிற்சி வகுப்புகள் பதினைந்து இருபது நாட்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை நடத்த ஏற்பாடு செய்தது. ஐந்து ஆண்டுகள் அப்பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடை பெற்றன. அதற்குத் தமிழைப் பொறுத்தவரையில் பச்சையப்பர் கல்லூரியே இடமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. அதற்கும் நானே பொறுப்பேற்க வேண்டிய நிலை (Director)யும் உண்டாயிற்று. தமிழில் அதற்குப் ‘புத்தொளிப் பயிற்சி' என்று பெயரிட்டேன். அது இன்று வழக்கத்தில் வந்துள்ளது. அப்பயிற்சி வகுப்பில் சென்னைப் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட கல்லூரிகளிலிருந்து ஒவ்வொரு பேராசிரியர் தேர்ந்தெடுத்து அனுப்பப்பெறுவர். இருபது கல்லூரியிலிருந்து ஆண்டுதோறும் வருவர். அவர்கள் வந்துபோக, தங்க வேண்டிய செலவுகளையும் பல்கலைக் கழகமே தந்து உதவியது. அப்பயிற்சி வகுப்புகளில் பங்கு கொள்ளும் ஆசிரியர்கள் கருத்தரங்கு முதலியன நடத்துவதோடு, நானும் உடனாக இரண்டொரு முதுநிலைப் பேராசிரியர்களும் வகுப்புகளை நடத்துவோம். அவற்றுடன், வெளியிலிருந்து சில அறிஞர்