பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆனந்த முதல் ஆனந்த வரை - ஆயினும் பெரியப்பாவுக்கு ஓர் அண்ணன் உண்டாம். அவருக்கு ஒரு மகன் இருந்தானாம். அவனைச் சுவிகாரமாக' வைத்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டார்கள். என்றாலும் ஒன்றும் நடக்கவில்லை. அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் பொருள் பங்கிடுவது முதல் பலவற்றில் மாறுபாடுகள் தோன்றும், ஒரு சிறு உதாரணம் போதும் எனக் கருதுகிறேன். வீட்டிலுள்ள பித்தளை வெண்கலப் பாத்திரங்களையெல்லாம் பங்கிட்டுக் கொண்டார்கள். அதில் ஒரு நான்கு பாத்திரங்கள் கொண்ட தூக்குக் கொத்து இருந்தது. அதை அப்படியே யாராவது ஒருவர் எடுத்துக் கொண்டிருக்கலாம். அதற்கு இருவருமே ஒப்பவில்லை. அன்று அதன் விலை ஐந்தாறு ரூபாய்க்குள் இருக்கலாம். அதை ஒருவர் எடுத்துக் கொண்டு பதிலுக்கு வேறொன்றை மற்றவர் எடுத்துக் கொள்ளலாம். ஆன்ாலும் அப்படிச் செய்ய ஒருவரும் விரும்பவில்லை. நான்கு பாத்தி ரங்களைப் பிணைத்திருந்த கம்பியை இரண்டாக்கினார்கள். இரண்டிரண்டு துண்டுகளாகப் பிரித்தார்கள். ஆளுக்கு ஒன்று என்று வைத்துக் கொண்டார்கள். அத்தனை வேறுபாடு இருவர் உள்ளங்களிலும் முகிழ்த்துவிட்டது. பின்பு பெரியம்மா இறக்கும்போது அவர்தம் பொருளையெல்லாம் எனக்கு வைத்துச் செல்ல, அந்தப் பிரிந்த தூக்கை ஒன்றாக்கி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது அன்றாடம் எனக்குப் பழமையை நினைவூட்டிக் கொண்டு, பிரித்துக் கெடுக்கும் மக்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறது. உடன் பிறந்தவர்கள் நிலை இது என்றால் சுற்றத் தாரைப் பற்றியும் இரண்டொன்று கூறவேண்டும். எங்கள் ஊரில் வாழும் சுமார் நூறு குடும்பத்தார்களும் ஒருவருக்கு ஒருவர் மிக நெருங்கிய சுற்றத்தாராகத்தாம் இருப்பார்கள்.