பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 43 வில்லை. உள்ள பொருள்களில் தனக்கு வேண்டியதென்று ஒரு சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டார். நாங்கள் இல்லாதபோது சிலவற்றை மற்றவருக்குக் கொடுத்துவிட் டார். ஒரு வீட்டில் சாமான்களை இட்டுப் பொதுவாக அவ்வீட்டின் சாவியையே மற்றவரிடம் கொடுத்து அவருக்கு வேண்டியவற்றை நாங்கள் அறியாமலேயே எடுத்துச் செல்லச் சொல்லிவிட்டார். இவையெல்லாம் நான் சற்று வளர்ந்த பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஆனமையின் அவர்களைப் பற்றி இன்னார் இனியார் என அறுதியிட எனக்கு வாய்ப்புக்கள் அளித்தன. எப்படியோ அவற்றையெல்லாம் கண்டுகொண்டே என் இளமைப்பொழுது கழிந்து கொண்டே வந்தது, இந்த உற்றாரையும் உடன் பிறந்தாரையும் எண்ணும் போதுதான் ஒளவைப்பாட்டி எப்படி உணர்ந்து உணர்ந்து அந்தப் பாடலைப் பாடினாள் என்ற எண்ணம் உண்டா யிற்று. ஆய்ந்து பார்த்தால் இந்நிலை பெரும்பாலும் வீட்டுக்கு வீடு காணும் ஒன்றாக உள்ளது. அந்த மூதாட்டி யின் உள்ளம் இவற்றையெல்லாம் கண்டுதான் நொந்து நொந்து அந்தப் பாடலைப் பாடி இருக்கும். அது நாடறிந்த பாட்டுத்தான், இதோ அந்தப்பாட்டு. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு! ஆம்! அம்மருந்து போன்று அன்றும், இன்றும் எனக்குத் துணை செய்பவர் இருக்கிறார்கள். அவர்களை வணங்கு கிறேன்.