பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆனந்த முதல் ஆனந்த வரை கொலைகார விரோதி எவவளவோ மேல். அன்று பங்கிடும் போது உனக்குப் பால் கொடுத்த வெள்ளி மூக்குச்செம்பைப் பையனுக்குத் தனியாகக் கொடுத்துவிடலாம் என்று பஞ்சாயத்துக்காரர் கூறியதை மறுத்து அவள் வாதாடி அதையும் பங்கிடும் பொருளில் வைத்தாளே! அன்றில்லாத கரிசனம் இப்போது எப்படி மிட்டாயில் வந்தது? கண்னே! அழாதே! யாரிடமும் மணமறியாது பழகக் கூடாது' என்று சொல்லிக் கொண்டே கையால் அள்ளிச் சோற்றை ஊட்டி னார்கள். என் அன்பான பாட்டி தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடியே இந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். தொழுதகையுள்ளும் படை ஒடுங்கும், ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து’ என்ற வள்ளுவர் குறள் எனக்கு அன்று தெரியாது. என்றாலும் மதியாதார் முற்றம் மதித்து மிதிக்கலாகாது என்பதும் ஒரு முறை மாறுபட்டாரோடு மறுபடியும் கூடிக் குலாவுதல் தவறு என்பதும் மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டன. அவற்றை இன்னும் நான் வாழ்வில் கொண்டுள்ளமையினால் சிற்சில வேளைகளில் பல. சங்கடங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. என்றாலும் அன்னை சொன்ன சொற்கள் அத்தனையும் உண்மைதானே! என் பெரியம்மாவை அவ்வாறு பிரித்துப் பார்க்கவும் என் மனம் இடம் தரவில்லை. அம்மாவோடு மாறுபட்டார் களாயினும் என்னிடம் அன்பாகவே இருந்தார்கள். ஊரார் கூறியபடி கடைசியில் அவர்கள் இறக்கும் காலத்திலே எல்லாச் செல்வங்களையும் எனக்கே வைத்துச் சென்றார்கள். அவர்களையும் வாழ்த்தி வணங்காதிருக்க முடியுமோ!