பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 73 நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நாட் களில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று இன்று நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்துக்கு ஒருவர், கணக்குக்கு ஒருவர், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் என்று இப்படிப் பல ஆசிரியர்கள் எனக்குப் பாடம் சொல்ல வருவார்கள். ஒவிய ஆசிரியரும் ஒருவர் வருவார். அவர் வயதில் இளையவர். எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு அப்பொழுதுதான் ஒவியம் கற்றுத்தரவும் தேர்ச்சி பெற்று அந்தத் துறைக்கு ஆசிரியராக வந்தவர். அவர் இளமை முடுக்கோடு இருந்தமை யால் பிள்ளைகளை அதட்டிக் கொண்டே இருந்தார். அந்தப் பள்ளியில் அக்காலத்தில் ஒரே திறந்த வெளிமண்டபத்தில் மூன்று வகுப்புகள் இருக்கும். இவர் போடும் சத்தத்தால் பக்கத்தில் உள்ள ஆசிரியர்களால்கூடச் சில சமயங்களில் பாடம் நடத்த முடியாமல் போய்விடும். என்றாலும் அவர் புது மிடுக்கோடு படங்கள் போட்டுக் கொண்டே இருந்தார். ஒரு நாள் அவரிடம் நான் அகப்பட்டுக் கொண்டேன். எனக்கு டிராயிங் என்றால் தெரியவே தெரியாது. பூனை போடச் சொன்ளால் கோடுதான் போடுவேன். பாவம்! அவர் என்ன செய்வார்? சொல்லிச் சொல்லிக் கொடுப்பார்; கரும் பலகையில் போட்டுப் போட்டுக் காண்பிப்பார். என்னிடம் வந்து பலமுறையும் சொன்னார் என்று தான் நினைக்கிறேன். எனினும் எனக்கு அதுபற்றி ஒன்றும் புரியவில்லை. பகல் மூன்றாவது பகுதி வகுப்பு; மணி பதினொன்று ஆகியிருந்தது. அவருக்கு, இளமையின் முடுக்குக் கிடையில் நான் சொன்னபடி செய்யாததும் கோபத்தை கிளரிவிட்டிருக்கும். என்னை அழைத்தார்; நான் நடுங்கிக் கொண்டே அருகில் சென்றேன். என் கையில் இருந்த டிராயிங் நோட்டை’ப் பற்றி இழுத்துத் தூர வீசி எறிந்தார். அது அடுத்த வகுப்பில் போய் விழுந்தது. எல்லா வகுப்பு மாணவர்களும் திகைத் தார்கள். திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. யாவருக்கும்