பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வங்கம் தந்த அரவிந்தரின் இளமையும் - கல்வியும்!

அரவிந்தர் என்றால் பிரமன் என்று பொருள்; அதாவது உலக உற்பத்தியை உருவாக்குபவன் என்றும், அரன், அயன், அரி, என்ற முக்கடவுளுள் ஒருவர் என்றும் கூறுகிறது ஆன்மீகக் குறிப்பு.

இந்த தத்துவத்திற்கு ஏற்றவாறு அரவிந்தர், அரசியல் துறை யிலும், ஆன்மீகம், இலக்கியத் துறையிலும் சில உற்பத்திக்களைப் புதுமையாகச் செய்துள்ளார். அவற்றை இனி வரும் அத்தியாயங் களிலே படிப்போம்!

அரவிந்தர், வங்க நாட்டிலுள்ள கொல்கொத்தா நகரில், 1872-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் பிறந்தார்! அவருடைய தகப்பனார் பெயர் கிருஷ்ணதன்கோஷ். அரசு டாக்டராக அவர் பணி புரிந்தார். தாயார் சொர்ணலதா தேவி! சொர்ணம் என்றால் தங்கம் என்று பொருள்! எனவே, பொன்னிற அழகுமேனியுடன் அவர் பளபளப்பாக வாழ்ந்தவர். அதே நேரத்தில் குடும்பத்தில் தங்கம் போன்ற மதிப்புடையவராகவும், பலர் போற்றும் பண்புடையவராகவும் இருந்தார்.