பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 9

மகரிஷி அரவிந்தரும், தெய்வீக அன்னை அவர்களும் இணைந்து இந்த ஆன்மீக ஞான மார்க்கத்திலே ஈடுபட்டது ஏன்? என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டிய சம்பவமாகும்.

‘ர் மனிதனை தேவனாக மாற்றுவது.

  • மனித இனத்தை விட, உயர்ந்த ஓர் இனத்தை இந்த உலகத்திலே உருவாக்குது ; அதற்காக அயராமல் அல்லும் - பகலும் உழைப்பது.

•+

கடவுள் சாம்ராச்சியத்தை, ஆண்டவனது ஆட்சியை, மண்ணுக்குக் கொண்டு வந்து நிறுவுவது. * மக்களை அருளாளர்களாக, சன்மார்க்கர்களாக, தெய்வீக வாழ்க்கை நெறியாளர்களாக மாற்றி, அந்த வாழ்க்கையை, வள்ளுவர் பெருமான் கூறும் தமிழ் வேதம் போல, வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவர்; வானுறையும் - தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கேற்றவாறு, அந்த தெய்வீக அருள் வாழ்க்கையை மண்ணுலகத்திலே நிறுவி, ஒரு புதிய ஒளி வாய்ந்த உலகத்தை உருவாக்குவது. + மனிதன் ஏற்கனவே இதயத்தின் ஆழத்தில், அவனது அந்தராத்மாவில், தெய்வீகமாக இருக்கிறான். இந்த அரிய உண்மையை மக்களுக்கு உணர்த்துபவன், இதை உணரும் போது, வாழ்க்கையிலும் இதை வெளிப்படுத்துவது சுலபமாகின்றது என்பதை அவன் உணர்ந்திட உழைப்பது. மேற்கண்ட தத்துவங்களை மகான் அரவிந்தரும், தெய்வீக அன்னையும் ஆகிய இருவரின் செயற்கரிய செயல்கள் செய்யும் அரிய இலட்சியமாக, அவர்களுடைய மனத்திலே அருகுபோல் வேரூன்றி, ஆல்போல் தழைத்தது.

இந்த அரிய ஞான சேவைகளுக்காகவே அவர்கள் இருவரும் தங்களது வாழ்நாட்கள் முழுவதையும் தியாகம் செய்தார்கள்.இருவர்களும் தங்களது நுண்ணுடல்களில் இன்றும் இருந்து கொண்டு; அவர்களது இலட்சியங்களை நிறை வேற்றுவதற்காகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.