பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 11

மகான் அரவிந்தர், தெய்வீக அன்னை அவர்களது இலட்சியம், சூக்கும உலகில் நிறைவேற்றப்பட்டதைத் தான்் திருமதி அன்னை அவர்கள், புதிய உலகம் பிறந்தது என்ற நற்செய்தியைப் பிறரறிய அன்று பிரகடனப் படுத்தினார்.

தூய உலகான நாம் வாழும் காலத்தில் நிறைவேற வேண்டிய பணிகள் சில இருக்கின்றன. அவை அனைத்தும் நிறைவேறுவது உறுதியாகி விட்டது. ஆனால், அந்த மீதமுள்ள பணிகள் நிறைவேறிட எவ்வளவு காலம் ஆகும் என்பதுதான்் நம்மிடையே உள்ள கேள்வி.

அந்தக் கேள்விக்குரிய பணிகள் நிறைவேறும் பொறுப்பு, உழைப்பால், உயர்த்திட மனிதர்களாகிய நம்மிடையேதான்் இருக்கின்றது.

இந்த உயர் சக்தி கோரும் செயல்களை நிறைவேற்று பவர்கள்,இந்தத் தெய்வீக மாற்றத்தை அடைய முடியும் என்று அன்னை நமக்கு அறிவித்தார். அதற்கான அடித்தளமாகத்தான்், அன்னை ஆசிரமத்தை அமைத்து, வளர்த்து, அதில் அனைத்து வசதிகளையும் ஆற்றி வழங்கியுள்ளார் என்பதே அதன் அடையாளமாகும்.

அந்தத் தெய்வீக வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுக்க அமைப்பாக, கட்டுப்பாட்டின் கால்கோள் நிலையமாக, ஆசிரம வாழ்க்கையை நமக்கு நடைமுறையில் செயல் படுத்திக் காண்பித்த ஆசானாக, அருளாளராக வாழ்ந்து காட்டினார் தெய்வீகச் சித்தம் படைத்த நமது அன்னையார்.

அருட் செல்வியான அன்னையின் வருகை, அதனால் உண்டான, உடனடிப் பயன் என்ன என்பதை, மகரிஷி அரவிந்தரின் தலைமை மாணவத் துறவியாரான நளினி காந்த குப்தா கூறுவதையும் கேட்போம் :

ஒழுங்கமைப்பு சிறிதும் இல்லாமல் தாறு மாறாக நாம் வாழ்க்கையை நடத்துகிறோம் என்பதை நாம் உணர்வதும் இல்லை, சிந்தித்துப் பார்ப்பதும் இல்லை.

நமது பொருட்களும், துணிமணிகளும் தாறுமாறாகக் கிடக்கின்றன. எந்தப் பொருளும் அதற்குரிய இடத்தில் ஒழுங்