பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 461

அவை மட்டுமல்ல, இவ்வாறான, பொய் ஆவணங்களைத் தயாரிப்பதில் போலீஸ்காரர்கள் வல்லவர்கள் என்றும் கூறினார்.

சித்தரஞ்சன்தாஸ் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் அரவிந்தர் சார்பாக வாதாடிய தனது வாதத்தை முடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

குற்றவாளித் தரப்பில் தாஸ் வாதமிட்ட வாதங்களை நீதிபதி பீச் கிராஃப்ட்டும் அஸ்ஸெலர்களும் கேட்டுவிட்டு சிறிது நேரம் மெளனமாகவே சிந்தித்தார்கள்.

அரசாங்க வழக்கறிஞராக வாதம் செய்த நார்டன் துரையும் பதிலேதும் கூறாமல் மெளனமாகவே அமர்ந்திருந்தார்.

பீச்கிராஃபட் என்ற இந்த நீதிபதியும் குற்றவாளி அரவிந்தரும், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஒன்றாக ஐ.சி.எஸ். தேர்வு எழுதியவர்கள்.

பண்டை மொழியான லத்தீன் மொழி தேர்வில் அரவிந்தர் முதல் மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேறியவர்.

இந்த வழக்கில் நீதிபதியாக அமர்ந்துள்ள பீச்கிராஃப்ட் என்ற ஆங்கிலேயர், அந்த தேர்வில் இரண்டாவதாக மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தில் தேறியவர். அந்த நீதிபதி அரவிந்தரின் மாணவப் பருவக் காலத்தின் திறமைகைள நன்றாக உணர்ந்தவர்.

இந்த அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில், முதல் இடம் பெற்றுத் தேர்வான இந்தக் குற்றவாளி, குற்றவாளியா? இல்லையா? என்று தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பில் ஐ.சி.எஸ் தேர்வில் இரண்டாம் வகுப்பில் தேர்வு பெற்றவர் நீதிபதியாக அமர்ந்துள்ளார்.

நீதிபதி பீச் கிராஃப்ட் ஆங்கிலேயர். பிரிட்டிஷ் ஆட்சி அதிகார வர்க்கத்தின் நேர் பிரதிநிதி. இந்த ராஜத் துரோக வழக்கில்