பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 33

அல்ஜீரியா என்பது இப்போது ஒரு நாடாகவே இருக் கின்றது. மீரா அங்கே சென்றபோது, அல்ஜீரியா ஆப்பிரிக்கா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பூமத்திய ரேகைக்கு அருகில், சகாரா என்ற உலகப் பெரும் பாலைவனத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு வெப்பம் அதிகமாக உள்ள நாடு ஆகும்.

சூரியன் உதிர்க்கும் சுடர்களின் கடும் வெப்பத்தை அப்படியே திருப்பிக் கக்கும் அந்த அல்ஜீரியா பகுதியில், ஒரு மலையோரத்தில் திரு. தியோன் தம்பதியருக்கு ஒரு தோட்டம் இருந்தது. தோட்டமா அது அப்போது? தோட்டம் சார்ந்த பெரிய ஒரு காட்டுப் பகுதி நிலம் அது.

தியோன் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு யூதர் ஆவார். அவரது துணைவியான திருமதி தியோஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேல்ஸ் மாநிலத்தின் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் சித்து ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அத் துறையில் மிகச் சிறந்த மேதைகளாக அங்கே விளங்கி இருந்தார்கள்.

திருமதி. தியோன் சித்து ஞானத்தில் குறிப்பாக ஆன்மீகத் துறையில், அனைத்தையும் உணர்ந்து கணவன் - மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து - அந்தத் தோட்டக் காட்டு மக்கள் வாழும் பகுதியில் நல்ல பெயரோடும், புகழோடும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அங்கே ஆன்மீகத்தை ஆராய்ச்சி செய்வதுதான்் தலையாய வேலை.

அத்தகைய திறமை மிக்க தம்பதிகளோடு அவர்கள் குடும்பத்தினர்போல இணைந்து கற்கக் கூடிய சித்து ஞானங்களை, மீரா கற்றுத் தேர்ந்தார்.

இந்த இரு சித்துக் கலைஞர்கள் வாழ்ந்த அந்த எஸ்டேட்டில், மக்கள் அவர்களது சித்து வித்தைகளைக் கண்டு வியப்பு அடைவதற்கான அற்புதங்களைச் செய்து வந்தார் மீரா.

திருமதி தியோன் ஒரு நாள் மிகவும் களைப்படைந் திருந்தபோது, தியோனைப் பார்த்து, உங்களுடைய களைப்பைப் போக்கிடக் கூடிய, வழி ஏதாவது சித்து வித்தையில் இருக்கிறதா? என்ன அது? என்று மீரா கேட்டார்.