பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 69

புற உலகின் புறக் கண்களுக்கு இந்த வெளிப்பாடுகள் இன்னும் புலனாக விட்டாலும், நுண்ணுலகில் இவை வெளிப்பட்டு விட்டன. பொன்னுலகு தோன்றியுள்ளது.

'பிரயோ, நீ விரும்பினால் நான் நிறைவேற்றுகிறேன். புதிய தோர் ஒளி புவி மீது இறங்கியுள்ளது; புதியதோர் உலகம் பிறந்துள்ளது. வாக்களிக்கப்பட்டவை நிறைவேறுகின்றன - என்று, அன்னை மீரா, அப்போது அனைவரும் அறியுமாறு பகிரங்கமாகக் கூறினார். பொன்னுலகு அன்னை விளக்கம்

புதிய பொன்னுலகு என்றாரே அன்னை அது எங்கே உள்ளது? என்று அறிய விரும்புவோர்க்கு அன்னை விளக்க அளிக்கையில், அந்த பொன்னுலகு நமது உலகுக்கு அருகாமையிலேயே இருக்கிறது.

நாம் அனைவரும் ஒற்றுமையோடு, ஒருமுனைப்பட்ட சிந்தனையோடு உழைத்தால், அழைத்தால், அது இறங்கி இங்கு வெளிப்படத் தயராகக் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டார் அன்னை மீரா,

கிருஷ்ண பரமாத்மா நுண்ணலகில் குருசேத்திர யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, அருச்சுனனுக்குத் தேரோட்டி யாக இருந்து புற உலகிலும் நிறைவேற்றி வைத்தார்.

அதுபோலவே, அன்னை மீரா அவர்களும், நுண்ணுலகில் தமது இலட்சியத்தை நிறைவேற்றி விட்டு, தமது ஆன்ம சக்தி மூலமும், அன்பு இதயம் மூலமும் ஆசிரமத்திலே உள்ளவர் களையும் உலக மக்களையும் வழி நடத்தி வந்தார்.

அன்னை அறிவித்த பிரகடனம்

1956-ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடந்தது என்ன? அப்போது என்ன அறிவித்தார் அன்னை? அதையும் கேட்போமே!

“இன்று மாலை கூட்டுத் தியானத்தின்போது உங்களிடையே இறைவனது சாந்நித்யம் மிகத் திண்மையாயும்,