பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 74

இந்த ஆசிரமத்தில் மதபேதம் இல்லை; சாதிச் சழக்கர்கள் இங்கே இல்லை; ஏழை என்றும் பணக்காரன் என்றும் எவனுமில்லை. தேசம், மொழி, இனம் என்ற வெறிச் சச்சரவுகளோ முணுமுணுப்பு களோ, மக்கட் சமுதாயத்தில் திடீர் திடீரென்று உருவாகும் மனக் குழப்பத் தகராறுகளோ ஒன்றுமில்லை இந்த ஆசிரமத்தில். காந்தியடிகள் பாராட்டினார்

வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த காந்தியடிகள், ஆசிரமத்தில் எவ்வாறு சாதி, மத வேறுபாடுகள் சிறிதும் இல்லாத ஒரு சமத்துவ சமுதாயத்தை இவ்வளவு சுலபமாக அவரால் அமைக்க முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டார்; அன்னையை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்.

மக்கள் ஒவ்வொருவரும் தனது அந்தராத்மாவில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது மகான் அரவிந்தரின் யோக நெறி! அப்படியானால், அந்தராத்மா என்றால் என்ன? அந்தராத்மா என்பது என்ன?

இறைவனது பொறிகளிலே ஒன்று அந்தராத்மா என்ற நெறி. ஆன்மாவில், ஆண், பெண், பிராமணன், சூத்ரன், ஏழை, பணக் காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் அந்தராத்மா வின் ஆன்மாவில் கிடையாது. பாரதியார் பாடினாரே நாம் எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒரு குலம் என்று. அதுதான்் ஆன்ம வாழ்க்கை.

ஆன்மாவின் அடிப்படையில் நிறுவப்படும் சமுதாய அமைப் பில் தான்், ரூசோவின் உண்மையான மனித சுதந்திரம், உண்மையான மனித சகோதரத்துவம், உண்மை யான சமத்துவம் எல்லாமே அதனதன் தன்னியல்பாகவே வெளியாகும். ஏன் தெரியுமா?

சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் என்பவை எல்லாமே ஆன்மாவின் இயல்பு - புறச் சீர்த்திருத்தங்கள் வாயிலாகத்தான்் இந்தத் தத்துவ உணர்வுகளைச் சமுதாயத்தில் நிறுவ முடியும்.