பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி む。

நின்றாள் எதையும் மீரா பொருட்படுத்த வில்லை! பொங்கிய பக்தி உணர்ச்சியே எரிமலையானது.

அப்போது ராணா - மீராவிடம் அக்பர் பாதுஷா வந்ததும் இசைமேதை தான்்சேன் பஜனைக் குழுவில் பாடியதும், முத்துமாலை பரிசளிப்பும் உனக்குத் தெரியாதா? என்று சுடு சொற்களால் கேட்டு விட்டார் ராணா பதிலேதும் பேசாமல் மீரா, 'கண்ணனே பதில் கூறுவார் என்று ஊமையாக இருந்து விட்டாள் ទ្រិវ្យា

பிருந்தாவனம் பக்தி யாத்திரையும், அங்கே நடந்த கிரிதாரி கிருஷ்ணனது விழாவிலே கலந்து கொள்ளவும் மீரா, புறப்பட்டு விட்டான் - மேவார் நாட்டைவிட்டு. மீரா போகிறாள் என்ற செய்தி பரவியதும். மன்னன் ராணா ஓடி வந்தார்: 'அரண்மனைக்குத் திரும்பி வந்து விடு மிரா என்று கெஞ்சினார்:

அரண்மனை திரும்ப - மீரா மறுப்பு

“மன்னவா! அரண்மனை திரும்பும் எண்ணம் எனக்கில்லை. உங்களது கோபமும், எனது வைராக்கியமும் கண்ணனது திருவுள்ளமே என்று மீரா திரும்பிப் பாராமல் நடந்தாள். கண்ணி ததும்பும் கண்களுடன் மீராவையே பார்த்துக் கற்சிலையாக நின்றார் ராணா.

மீரா பிருந்தாவனம் போய்விட்டதை அறிந்து ஊராரும், மற்றவர்களும் கல்நெஞ்சர் ராணாவைக் கண்டபடி விமரிசனம் செய்தார்கள். ரகுநாத பட்டர் அமைச்சர் என்ற தகுதியில் ராணாவைக் கண்டு மீராவை அழைத்து வருமாறு கூறினார்.

அக்பர் கோபம்! படையெடுப்பேன்!

இந்த சமயத்தில் சக்கரவர்த்தி அக்பர், மீராவின் வழிபாடு களைக் காணவே தாம் வந்ததாகவும், அவரது பக்தியின் உருக்கத்தை உணர்ந்தே முத்து மாலையைக் கிரிதர கோபாலன் கண்ணன் சிலைக்குச் சூட்டியதாகவும், இதற்காக மீரா நாடு துறந்து பிருந்தாவனம் யாத்திரைப் போக வைத்தது பற்றி