பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 87

கிரிதரா என்ற பாடலை, தனது இதயத்தை மீறி எழுந்த கவிதையால் திருக்கோயில் மக்களையும் ஞானவான்களாக்கி, மண்டபம் உருகும் வகையிலே மீரா பக்தியோடு உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்தாள்.

பக்தி உணர்வுகள் இவ்வாறு கழிந்த நேரம் யாருக்கும் தெரி யாமல் நகர்ந்து கொண்டே இருந்தது. மீரா திரும்பலாமா அரண் மனைக்கு? என்றார் ரானா. கனிந்த கனிச் சொற்களால் அவர் கேட்டார்:

கிருஷ்ணா முகுந்தா மூராரே! கோஷம்:

ஆன்ம ஞானி மீரா கண்களிலே கண்ணிர்த் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சிதறி விழுந்தன. கர தாளம் நின்றது. குயிலினும் இனிய கானம் பாடும் கணிமிகு குரலோடு, ரானா ஜி: இந்த உடலுக்கு நாதன் நீங்கள்தான்்! ஆனால், எனது இதய நாதன் கண்ணன். இன்று அவன் என்னை ஆட்கொள்ள முடிவு கொண்டான்.

தங்களைப் போன்ற பரம பக்தர் போற்றும் பக்தி வழிக்கே உரிய துணைவரை - நான் வணங்குகிறேன். நாம் இருவரும் சேர்ந்து எழுதிய கவிதைகளைச் சேர்ந்தே பாடுவோம் என்றார் மீரா.

உளம் உருகினார் ராணா - மீரா உரைத்த உணர்ச்சி மிகும் பேச்சைக் கண்டு கம்பீரமான குரலில் ராணா இசை மழை பொழிந்தார். இருவரும் மோனத்திலே மிதந்து, தியானத்திலே ஆழ்ந்து, கானத்தைக் கேட்டோர். உருகும் உள்ள நிலையில், வானத்துக் கானம் பாடியாக கிருஷ்ணர் சிலை முன்பு நெடுநேரம் மெய்மறந்து நின்றபடியே இருந்தார்கள். வழிபாடு நாமாவளியும் முடிந்தது! கண் விழித்தார் ராணா.

கிரிதாரி கிருஷ்ணனிடமே மீரா அடைக்கலமானாள்:

மெய்மறந்து பாடிக் கொண்டிருந்த மீரா, கண்ணன்

திருவடிகளுக்கு அருகே அவரது பாதத்தைப் பற்றியபடியே சுருண்டு விழுந்தாள்: அவள் வாய் கிரிதாரி என்னை