பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தற்கு இரண்டு காரியங்கள் நடைபெறவேண்டும். 1. கோசத்தின் வழியாகக் குய்யத்துள் பாயும் விந்து,நீரில் விந்துயிர்கள் இருத்தல் வேண்டும். 2. சினைப் பையிலிருந்து முட்டை சினைக் குழாய்க்கு வந்து சேர வேண்டும். இந்த இரண்டு காரியங்களும் நிகழ்ந்தால்தான் விந்துயிர் முட்டையுடன் கலந்து கரு உண்டாகும். ஆதலால் கரு உண்டாகாதிருக்க வேண்டுமாயின் 1. விந்துயிர் குய்யத்துள் வந்து சேராதபடி தடுத்துவிடவேண்டும். அல்லது 2. முட்டை, சினைப் பையிலிருந்து சினைக் குழாய்க்கு வந்து சேராதபடி தடுத்துவிட வேண்டும்.

டாக்டர்கள் விந்துபிரைத் தடுப்பதற்காகக் கணவனுடைய விந்துக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் அரை அங்குலம் வெட்டி எடுத்துவிட்டு அறுத்த முனைகளை இறுக்கிக் கட்டிவிடுகிறார்கள். இந்த ஆப்பரேஷனை “விந்துக் குழாய் வெட்டல்' என்று கூறுவார்கள். இந்த ஆப்பரேஷன் செய்தால் விதையில் உற்பத்தியாகும் விந்துயிர்கள் விந்துப் பைக்குச் செல்ல முடியாது.