16
ஆயினும் எதைச் சிபார்சு செய்கிறீர்கள் என்று கேட்டால் நான் கணவன் செய்யும் ஆப்பரேஷனையே சிபார்சு செய்வேன். அதற்குரிய காரணங்கள் இவை:-
1. கணவன் எந்த நேரத்திலும் செய்துகொள்ளலாம். மனைவி குழந்தை பெற்று மூன்றாவது நாளே செய்யலாம். மற்ற வேளைகளில் செய்வதானால் வயிற்றைக் கீறியே செய்யவேண்டும். அதையும் அபாயமில்லாமலே டாக்டர்கள் செய்கிறார்கள். ஆயினும் அது அவசியமில்லை, குழந்தை பெற்றவுடன் செய்வதே நல்லது. அப்போது வயிற்றைக் கீறவேண்டாம். குய்யம், கருப்பப் பை முதலியவை குழந்தை வெளிவரக் கூடிய அளவு விரிந்திருக்குமாதலால் அதன் வழியாகவே ஆப்பரேஷனை எளிதில் செய்துவிடுவார்கள்.
2. கணவனுக்குச் செய்யும் ஆப்பரேஷன் வயிற்றுக்கு வெளியே நடப்பது. ஆனால் மனைவிக்குச் செய்யும் ஆப்பரேஷன் வயிற்றினுள்ளே நடப்பது. அதனால் கணவன் ஆப்பரேஷன் மனைவி ஆப்பரேஷனை விட எளிது.
3. ஆதலால் கணவன் வைத்தியசாலையில் படுத்திருக்க வேண்டியதில்லை. ஆப்பரேஷன் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிடலாம். வீட்டிலும் நாலைந்து நாள் அதிகமாக நடக்காமலிருந்தால் போதும். படுத்திருக்க வேண்டியதில்லை.
ஆகவே இரண்டு மூன்று குழந்தைகள் உடைய தந்தை மார்களே! எவ்விதத் தயக்கமுமின்றி ஆப்பரேஷன் செய்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலெல்லாம் இலவசமாகவும் மிகுந்த கவனமாகவும் ஆப்பரேஷன் செய்கிறார்கள். ஆப்பரேஷனைச் செய்து உங்களுக்கும் உங்கள் மனைவி