உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20



முதலாவதாக

மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதனால் உண்டாகக். கூடிய நன்மைகள் பல. அவற்றுள் முக்கியமானவை இவை:--

1. தாய் பலமுறை பிரசவித்தால் அவளுடைய உடல் நலம் குன்றும். மூன்று குழந்தைகள் போதும் என்று தீர்மானித்துக் கொண்டால் அவள் தன் குழந்தைகளை நன்றாகக் கவனித்து வளர்ப்பதற்கு வேண்டிய ஆற்றலும் ஆரோக்கியமும் உடையவளாக இருப்பாள்.

2. தந்தை அதிகக் குழந்தைகள் ஆய்விட்டதே, எவ்வாறு வளர்க்கப் போகிறோம் என்று கவலைப்பட வேண்டியதில்லை. மூன்று குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்களை நல்லவிதமாக அதிகக் கஷ்டமின்றி வளர்க்க முடியும்.

3. குழந்தைகள் சத்தான உணவும், சுத்தமான உடையும் நல்ல விதமான சூழ்நிலையும் பெறுவார்கள். நோய் நொடியின்றி வளர்வார்கள். தங்கள் சக்திக்கு, ஏற்றவிதமான கல்வியைப் பெற்று சந்தோஷமாக வாழ்வார்கள்.


இரண்டாவதாக

ஒரு குழந்தை பெற்று மூன்று ஆண்டுகள் சென்ற. பிறகே அடுத்த குழந்தை உண்டாக வேண்டும் என முடிவு செய்து கொள்ள வேண்டும். அவ்விதமானால் தாயின் உடல் நன்கு தேறி பலம் பெறும், குழந்தையை, நன்றாகக் கவனிக்க முடியும், குழந்தையும் நன்கு, வளரும். அந்த மூன்று ஆண்டுகளில் குழந்தை உண்டாகாமல் இருப்பதற்காக இரண்டு வழிகள் இருக்கின்றன.