பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

என்று எண்ணுகிறவர்கள் இந்த மருத்துவ முறைகளை விட்டுவிட்டு இனிக் காதல் செய்வதில்லை என்று மனத்தில் உறுதி செய்துகொண்டு அவ்விதம் காதல் செய்யாமல் இருந்துவிடவேண்டும், இந்த இயற்கை முறையே சரியான முறை. ஆனால் எல்லோர்க்கும் இது சாத்தியப் படாது, எல்லோரும் மனத்தை அடக்கிக்கொண்டு காதல் செய்வதை அறவே துறந்துவிட முடியாது. அவர்கள் காதல் செய்யவும் வேண்டும், குழந்தை உண்டாகாமலும் இருக்கவேண்டும் என்றே எண்ணுவார்கள் அதற்கும் ஓர் இயற்கையான முறை இருக்கிறது. குழந்தை வேண்டாம் என்று எண்ணினாலும் காதல் செய்யாமல் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாமல் கருத்தரிக் காத நாட்களில் காதல் செய்யலாம். இதில் தவறு ஏதுமில்லை.

அமெரிக்க நாட்டில் மார்கரட் ஸாங்கர் என்ற பெயருடைய ஓர் அம்மையார் இருக்கிறார். அவர் தாம் அந்த நாட்டில் முதன் முதலாகக் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துக்காட்டி அதற்கான முறைகளைப் பரவச் செய்தவர். அவர் இப்போது சர்வதேசக் குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவராக இருந்துவருகிறார். அவர் 1936-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்திருந்தார். மகாத்மா காந்தியடிகளுடன் குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். காந்தியடிகளும் போப்பாண்டவரைப் போலவே மருத்துவர் கூறும் செயற்கை முறைகளை ஆதரிக்கவில்லை. அதோடு போப்பாண்டவர் கூறும் காதல் செய்யாதிருக்கும் முறையையே ஆதரித்தார். அது எல்லோர்க்கும் சாத்தியப்படாது என்பதை அம்மையார் வற்புறுத்தி வாதித்தார். அதன்மேல் காந்தியடிகள் சரி, அப்படி