பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

வைப் பயன்படுத்தி இயற்கையை, அடக்கி ஆண்டு நமக்கு நன்மையான பலவற்றைத் தேடிக் கொள்கின்றோம், அங்ஙனமிருக்கக் குடும்பக் கட்டுப்பாட்டு விஷயத்தில் மட்டும் அறிவைப் பயன்படுத்த வேண்டாம், இயற்கைப்படியே நடக்கவேண்டும் என்று கூறுவது பொருந்தாது. இந்த விஷயத்திலும் செயற்கை முறைகள் தான் முழுப்பலன் தருமாயின் அவற்றைக் கையாளத் தயங்கலாகாது.

நம்முடைய ராஷ்டிரபதி பேரறிஞர், அவர் தவறான கருத்துக் கூறமாட்டார். ஆதலால் எல்லோரும் எந்த முறை நிச்சயமாகப் பயன் தருமோ, அந்த முறையை அனுஷ்டிக்கப் பின்வாங்கலாகாது. ஆப்பரேஷன் முறை அத்தகையது என்பதில் ஐயமில்லை.

(3) கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாதிருக்தால் குழந்தை உண்டாகாது என்றால் ஆப்பரேஷன் முறையை விட்டுவிட்டு இந்த முறையைக் கையாளலாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பர்.

இந்த முறையைக் கையாளவேண்டுமானால் கருத்தரிக்கும் நாட்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

(விபரம் : 8-ஆம் பக்கம் பார்க்க )

படங்களைப் பார்த்தால், இரண்டு சினைப் பைகள் இருப்பது தெரியும். சாதாரணமாக ஒரு மாதத்துக்கு