பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஒரு முட்டை இந்த மாதம் வலது சினைப்பையிலிருந்து வெளியானால் அடுத்த மாதம் இடது சினைப் பையிலிருந்து வெளியாகும் சினைக் குழாயின் விரல்கள் அதைக் கிரகித்துச் சினைக்குழாய் வழியாக அனுப்பும். அம் முட்டை கருப்பையை அடைய ஒரு நாளாகும். அந்த நாளில்தான் கரு உண்டாக முடியும்.

அந்த நாளில் கோசத்திலிருந்து குய்யத்தினுள் பாயும் விந்திலுள்ள விந்துயிர்கள் கருப்பைக்குள் சென்று அங்கிருந்து சினைக்குழாய்களுக்குள் நுழையும். முட்டையுள்ள சினைக் குழாயினுள் செல்லும் விந்துயிர்களில் ஒன்று முட்டையைக் கிழித்துக் கொண்டு அத்துடன் ஐக்கியமாகிவிடும். இவ்வாறு விந்துயிர் கலந்த முட்டை கருப்பைக்கு வந்து அதில் ஒட்டிக் கொண்டு குழந்தையாக வளரும்.

ஆகவே கருத்தரிப்பதற்குக் கட்டாயமாக வேண்டப்படுவதாகிய முட்டையானது ஒரு மாதவிடாய்க்கும் மறு மாதவிடாய்க்கு மிடையில் வெளிவந்து சினைக் குழாயில் தங்குவது ஒருநாள் தான். அந்த நாளில் காதல் செய்யா விட்டால் கரு உண்டாகாது, குழந்தை பிறக்காது, மற்ற நாட்களில் காதல் செய்யலாம். ஆனால் மாதவிடாய்களுக்கிடையில் முட்டை. வெளி வரும் அந்த நாள் எது ? அதைக் கண்டுபிடிப்பது எப்படி ? அந்த நாள் இதுதான் என்று நிச்சயமாகக் கூறமுடியுமானால் ஆப்பரேஷனும் வேண்டாம், வேறு எந்த முயற்சியும் தேவையில்லை.

ஆஸ்திரியா நாட்டு டாக்டர் காஸ் என்பவரும் ஜப் பான் நாட்டு டாக்டர் ஒகினோ என்பவரும் செய்த ஆராய்ச்சிகளின் பயனாக முட்டை வெளியாவது மாதவிடாய் காண்பதற்குப் பதினாலுநாட்களுக்கு முந்திய நாள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாதவிடாய்க்