பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஆபுத்திரன்

-கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாதவி சுதமதிகளைக் கண்டாள். அவர்கள் வியப்படையும் வண்ணம் அவர்களுக்கு, முற்பிறப்பைத் தான் அறிந்தபடியே உணர்த்தி, "இது ஆபுத்திரனது திருக்கரத்திலிருந்த அமுதசுரபி, இதனைத் தொழுமின்” என்று அக்ஷய பாத்திரத்தைச் சுட்டிக் காட்டித் தொழும்படி செய்தாள். பின்னர் அறவணவடிகளை அடைந்து தவவழியைப் பெறும்பொருட்டு மாதவி சுதமதிளை அழைத்துக்கொண்டு அவரிருக்குமிடத்தை விசாரித்தறிந்து சென்று அவரைத் தரிசித்துப் பணிந்தாள். பின்பு, தான் உவவனஞ் சென்றது முதல், மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவஞ் சென்று புத்த பீடிகையைத் தரிசித்துப் பழம் பிறப்புணர்ந்து அமுதசுரபியைப் பெற்றது வரையுமுள்ள நிழ்ச்சிகளைக் கூறித், தனக்குத் தரும உபதேசம் செய்து ஆபுத்திரன் வரலாற்றையும் தெரிவிக்கும்படி வணங்கிக் கேட்டாள். அதற்கு அம்முனிவன் மகிழ்ந்து, "சிலநாள் சென்று உனக்குத் தருமோபதேசம் செய்வேன்; நீ உயிர் மருந்து போன்றதாகிய இவ்வமுதசுரபியைக் கொண்டு பசிப்பிணியை உலகில் ஒழிப்பாயாக" என்று கூறிப் பின்பு மணிமேகலை விருப்பப்படி ஆபுத்திரனது வரலாற்றைக் கூறத்தொடங்கி, அவன் பிறந்ததும், வளர்ந்ததும், அமுதசுரபி பெற்றதும், மணிபல்லவத்தில் இறந்ததும், பின் சாவககாட்டில் புண்ணியராஜனாய் அரசு செய்வதுமாகிய வரலாறு முழுதையும் மகிழ்வுடன் அவளுக்கு விரித்துக் கூறினார்.

பின்னரும் அறவணவடிகள் மணிமேகலையைப் பார்த்து, "காவேரி நதி மாறாது நீர் பெருகி நாட்டை வளமுண்டாகச் செய்தும் யாது காரணத்தாலோ உயிர்கள் வறுமையால் வருந்துகின்றன. இந்த அமுதசுரபியை, நீ இனிச்-