பக்கம்:ஆப்பிள் பசி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி அவனைத்து 8ளத்து நின்றது. அவள் பார்வை ஒரு தாபமாக அவன் கண்ணில் வலித்தது. தனக்குள் ஒரு புயல் வீசுவதை உணர்ந்தான் அவன். .

"சாமண்ணு! இவள்தான் உனக்கு ஏற்றவள். மனசை உன்கிட்டே திறக்கிருப் போல இருக்குதே!”

"இல்லை பயமாயிருக்கு சகுந்தலா நாகரிகமானவள்! அவள் விகல்பம் இல்லாமல் பேசுவதை நான் தப்பா நினைச்சுக்கப் படாது! அவள் அந்தஸ்து எங்கே? கேவலம் ஒரு நடிகளுன என் அந்தஸ்து எங்கே? நான் இதற்கு ஆசைப்படக் கூடாது. அவள் ஓர் ஆப்பிள். இந்த அன்னக்காவடிக்கு ஆப்பிள் பசி ஏற்படக் கூடாதா? .

'ஆசைப்படு சாமண்ணு, ஆசைப்படு! பெரிசை நினைச்சுத் தான் ஆசைப்படனும். ஆமாம்! விடாதே, முயற்சி பண்ணு!' சாமண்ணுவின் கண்கள் நிறைய வார்த்தைகளோடுதவித்து நின்றன. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இழுத்து நிறுத்தி யது. சகுந்தலா படித்தவள். சமூகத்தின் மேல் தட்டில் வாழ்கி றவள். உன்னேயாவது... நினைக்கிறதாவது...' என்றது உள்குரல். r

'உணர்ச்சிவசமா அதை உங்களுக்குப் படிச்சுக் காட்டத் தெரியுது. நீங்களே எங்களுக்குப் பயிற்சி, கொடுத்தால் கூட நன்ருயிருக்கும்” என்ருன் சாமண்ணு. . .

அவள் கலகலவென்று சிரித்துக் கொண்டே, 'என்னையே சகுந்தலாவா நடிக்கச் சொன்னலும் சொல்லுவீங்க போலி ருக்கே!' என்ருள். சாமண்ணுவின் மனம், 'டேய் விட்டுட் டியேடா’ என்று இடித்துக் காட்டியது. -

டிரஸ் ஒத்திகையன்று ராத்திரி எட்டு மணிக்கு ஒரு பள்ளிக்கூட மேடையில் நடித்துப் பார்த்தார்கள்.

பன்னிரண்டு மணி வரை ஒத்திகை நடந்தது. ஒரு சின்னப் பிழை வரவில்லை. ஒருத்தர் கூட வசனம் பிசகவில்லை.

சாமண்ணு அசல் துஷ்யந்தனுகவே ஆகிவிட்டான். -

'இது பிரமாதமான நாடகமா அமையப் போகிறது” என்று சொல்லிப் பாவலர் பூசணிக்காய் மீது கற்பூரம் வைத்துக் கொளுத்தி திருஷ்டி சுற்றிப் போட்டார். х.

சாமண்ணுவுக்கு ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது. ஒரு ஹிரோ ஆக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நினைவாகும் நாள் நெருங்கி விட்டதை நினைத்துப் பார்க்கும் போது உற்சாகம் சிறகடித்துப் பறந்தது.

தாயாரை நினைத்து மானசீகமாக வணங்கினன். அப்போது மூலையில் சற்று ஒரமாக உட்கார்ந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு வடநாட்டு சேட்டுகள் எழுந்து வந்து சாமண்ணுவைக் கைகுலுக்கிப் பாராட்டினர்கள். 11:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/117&oldid=1028005" இலிருந்து மீள்விக்கப்பட்டது