பக்கம்:ஆப்பிள் பசி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புரிஞ்சுண்டா சரிதான்! அப்போ ஒண்னு சொல்றேன் கேளு. நாளைக் காலையில் எழுந்ததும் பாப்பா கிட்டே போய் அவள் செஞ்சதுக்கெல்லாம் ஒரு வார்த்தை நன்றி சொல்லிட்டு அப்புறம் ரயில் ஏறு! அதைத் தவிர அந்தப் பெண்ணுக்கு வேறே எதுவுமே வேண்டியதில்லை. ஆமா...'

- 'ஆகட்டும் மாமி! காலையிலே எழுந்த உடனே போயிட றேன்” என்ருன் சாமண்ணு. -

மிகுதியான மகிழ்ச்சியில் அன்றிரவுஅவனுக்குத் தூக்கம் வரவில்லை.

காலேயில் எழுந்து தோட்டத்தைச் சுற்றி வந்தான். மணி ஒன்பது அடித்த ப்ோது வாசலில் பீபிப்பீம்' என்று ஹாரன் அடித்துக் கொண்டு புதிய கார் ஒன்று வந்து நின்றது.

சாமண்ணு எட்டிப் பார்த்தான். அந்தப் புது ஸ்ெடானி லிருந்து தரகர் வராகசாமி இறங்கி வந்தார். அதன் சிவப்பு நிறம் கிளுகிளு என்று கண்ணைப் பறித்தது. ஜெர்மன் ஸில்வ ரில் பிடிகள் பளபளத்தன. - " .

'இப்பத்தான் மரக்காயர் கடையிலேருந்து எடுத்துட்டு வந்தேன். வெல்ல ம்ண்டி செட்டிய்ார் இந்தக் கலர்தான் வேணும்னு ஒத்தைக் கர்லிலே நிக்கிருரு. அவருக்குத் தெரி யாமல் உங்களுக்குன்னு சொல்லி எடுத்திட்டு வந்துட்ட்ேன். மரக்காயருக்கு உங்க் நாடகம், உங்க நடிப்புன்ன உயிராச்சா! 'சாமண்ணுவுக்குத்தானே! சரி, எடுத்துட்டு போன்னு சொல்

லிட்டார்' என்ருர் வராகசாமி. - -

தரகர் வராகசாமி ஒரு வீட்டுக்கு வந்தால் அதுவே ஒரு அந்தஸ்து! பெரிய புள்ளிகள் வீட்டில் மட்டிலுமே காண்க் கூடிய இந்த வராகசாமி தன்னையும் தேடி வரும் காலம் ஒன்று உண்டு என்று.சாமண்ணு எதிர்பார்த்திருந்தான். இதேர் வந்து விட்டார். இப்போது சொந்த வீட்டில் வேறு குடி புகுந்தா யிற்று. அடுத்தது காரா? - - - -

அவனை விட்டுப் போன எல்லா சொர்க்கமும் திரும்பி வந்தது போல் உணர்ந்தான். * .

வராகசாமி தாழ்வாரத்தில் அமர்ந்தார். - 'விலை என்ன சொல்ருர் மரக்காயர்?' என்று கேட்டான் சாமண்ணு. - - -

"சாமண்ணு ஸார்! நீங்க விலை கேட்கலாமா? விட்டுட்டுப் போன்னு சொல்லுங்க போதும். உங்ககிட்டே பேரமோ, கிரமோ பேச மாட்டார்.' -

உச்சி குளிர்ந்தது சாமண்ணுவுக்கு. - - இதற்குள் ஸெடானைப் பார்க்க நர்லைந்து பேர் சூழ்ந்து காண்டனர். டிரைவர் அவர்களைத் தள்ளி நின்று பார்க்கச் சொன்னன். பெட்ரோல் வாச்னை கும்மென்று விந்து மூக்கை

142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/138&oldid=1028077" இலிருந்து மீள்விக்கப்பட்டது