பக்கம்:ஆப்பிள் பசி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

ഖ്ടു. முடிந்ததும் சாமண்ணு சோர்வுடன் ஸ்ெட் டுக்கு வெளியே வந்தபோது, அங்கே இன்னும் சகுந்தலா காத்திருப்பதைப் பார்த்தான். கண்கள் சற்று இடுங்கின. 'இங்கேயா இருக்கீங்க?' என்ருன்.

"ஆமாம் சாமு! உங்களுக்காகக் காத்துக்கிட்டு' என்ருள். 'எனக்கா! எனக்கு எங்கேஜ்மெண்ட் இருக்கே!' சகுந்தலா முகம் சுண்டியது. - 'இன்னிக்குத் தவிர்க்க முடியாத வேலை இருக்கு. இன்னொரு நாள் பார்ப்போமே!' . . .

'ஊஹூம், இன்னிக்கு இப்போ என் கூடத்தான் வரணும்." அவள் கண்கள் கொஞ்சுதலாய்க் கெஞ்சி நின்றன். 'இல்லை, சகுந்தலா! இப்போ நான் நிச்சயம் ஒரு முக்கியஸ் தர் வீட்டுக்குப் போகணும். ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டிருக் காங்க. இன்னொரு சினிமா பற்றிப் பேசப் போருேம். நான் வரேன்! அப்புறம் சந்திக்கலாம்.' -

கையை இரண்டு ஆட்டு ஆட்டிவிட்டு அடுத்த வாசலை நோக்கி விரைந்தான்.

சகுந்தலா வெளியேறினுள். வாசலில் முன் இரவுக் காற்று குளுமையாக அவளைக் கோதியது. சற்று நேரம் காற்று வாங்கி நின்ருள். பிறகு சற்று நடந்து டாக்ஸி தேடினள்.

பின்னல் ஒரு கார் வந்து கொண்டிருப்பதை வெளிச்சம் அறிவித்தது. சகுந்தலா ஒதுங்கி நின்ருள்.

கார் அவள் அருகே சற்று மெதுவாகிப் போக, சாமண்ணு அதில் உட்கார்ந்திருப்பதை அரைக் கண்ணுல் கவனித்துக் கொண்டாள்.

183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/157&oldid=1028117" இலிருந்து மீள்விக்கப்பட்டது