பக்கம்:ஆப்பிள் பசி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயரமும் விசாலமும் நிறைந்த தர்பார். தங்க முலாம் பூசிய விதானங்கள், சாமண்ணுவும் சபா பிரமுகர்களும் அசல் சரித்திர கால புருஷர்களாகத் தெரிந்தார்கள்.

"ஜய விஜயீ பவ' கோஷங்களுக்கு இடையே சாமண்ணு தர்பாருக்குள் நடந்து வந்தான்.

'அடே சாமண்ணு! உன்னிடம் இவ்வளவு திறமை இருக்கா? என்று நினைத்தார் ராமமூர்த்தி.

சகுந்தலாவுக்குக் கண்களில் ஈரம் பனித்தது. தாள வரிசைகள் முழங்க, இரு மின்னல் பெண்கள் நீள சடையும், சலங்கையுமாய் ராஜசடை நடுவில் பளிர் பளிர் என்று ஒளிப் பின்னலாக ஆடி வர அதைப் படமாக்கினர் &6fᏧ . " - -

குறுநகை, உவகை, பரவசம், ஆனந்தம்,புன்சிரிப்பு, முறுவல், மந்தகாசம் இதெல்லாம் ஒரே உணர்ச்சி அல்ல. அவற்றுக்குத் தனித் தனித் துல்யங்கள் உண்டு என்று காட்டியது அவன் நடிப்பு.

'பிச்சு உதர்ருன்' என்ருர் ராமமூர்த்தி பரவசமாகி. "ஆமாப்பா! இவ்வளவு பிரமாதமா நடிப்பார்னு யாருமே எதிர்பார்க்கலை' என்ருள் சகுந்தலா ஆச்சரியக் குரலில்.

'பெண்ணே, நீ யார்?' என்று துஷ்யந்த சாமண்ணு எதிரில் நின்ற பெண்ணைக் கேட்க, -

சுபத்ரா முகர்ஜி திடுக்கிடுகிருள். - יי" . י 'மகாராஜா என்னைத் தெரியவில்லை?நான்தான் சகுந்தலை" என்று பதில் சொல்லுகிருள். ----

'யாரம்மா நீ? புதிர் போடுகிருயே!' என்று துஷ்யந்தன் வினவுகிருன் -

'முன்பு ஒருநாள் தங்கள் அரண்யத்தில் வேட்டையாட வந்தபோது கண்வரிஷி ஆசிரமத்தில் என்னைச் சந்திக்கவில் லையா?”

சுபத்ராவின் கண்களும் வார்த்தைகளும் கவலையைத் தெரி விக்கின்றன. -- --

"கண்வ ரிஷி ஆசிரமமா? ஆமாம், வத்தேன். ஆனல் உன்னைப் பார்த்த நினைவு இல்லையே!' -

'நான் அவரது வளர்ப்புப் பெண்' 'சரி, அதனல் என்ன?” ழிகச் சாதாரணமாகக் கேட்டான் துஷ்யந்தன். தாங்கள் என் காலிலிருந்து முள்ளை எடுக்கவில்லை?" முள் எடுத்தேன!' -

  • {

கண்வரிஷி ஆசிரமத்தில் தங்கி என்ைேடு பழகினர்களே. அதைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?'

சாமண்ணுவின் பார்வையே சந்தேகம் காட்டியது. "பழக மட்டும் செய்யவில்லை. என் மீது நேசம் வைத்தீர்கள். 'உன்னை விரும்புகிறேன். உன் மீது பிரேமை கொண்டிருக் I88 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/160&oldid=1028127" இலிருந்து மீள்விக்கப்பட்டது