பக்கம்:ஆப்பிள் பசி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

சாமண்ணு அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனபோது சுபத்ரா முகர்ஜிக்கு மூர்ச்சை தெளிந்திருந்தது. ஆலுைம் மெலிந்து வாடிப் போயிருந்தாள். ஈன சுரத்தில் பேசிள்ை. உதடுகள் தெளிவில்லாத ஒசைகளை விடுத்தன. நகரின் புகழ் ப்ெற்ற டாக்டர் மக்டனல் துரையே வந்து அவள் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு,"ப்ல்ஸ் சரிய்ர்க இருக்கிறது. யூ ஆர் ஆல் ரைட்' என்று சொல்லி, விட்டுப் போனர். இரண்டு ஐரோப்பிய நர்சுகள் எந்நேரமும் படுக்கை அருகிலேயே இருந் தார்கள். -

சாமண்ணு உள்ளே நுழைந்தபோது யாரோ வசீகரமான வாலிபன் ஒருவன் கட்டிலுக்கருகில் உட்கார்ந்திருந்தான். கிருதா மீசை வைத்திருந்தான். அவனைப் பார்த்தபோது சாமண்ணுவுக்கு ஏதோ மாதிரி இருந்தது. நெஞ்சில் உஷ்ண மாக ஜ்வாலை வீசியது. .

யார் அவன் ? . - - - சுபத்ராவைத் தொட்டு அந்நியோன்யமாய்ப் பேசுகிருன். ஜோக் அடித்துச் சிரிக்கிருன். அவளும், கோஷ்! கோஷ்!' என்றுகொஞ்சி அழைத்து நெருக்கம்கொண்டாடி இழைகிருள். எல்லோரும் அவனுக்கு மரியாதை கொடுக்கிருர்கள்.

செக்கச்செவேர் என்று நிறம். திண்மையாகப் புருவம், பளபள என்று வாரிவிட்ட கிராப்! -

சாமண்ணு தெரிந்தவர்களிடம் நாசூக்காக விசாரித்த போது, அவன் பெரிய ஜூட் மில் சொந்தக்காரர் மகன் !{) ኣ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/162&oldid=1028133" இலிருந்து மீள்விக்கப்பட்டது