பக்கம்:ஆப்பிள் பசி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நீ என்ன சொல்கிருய்?' என்பதுபோல் சகுந்தலாவைப் பார்த்தார் டாக்டர்.

'என்ன சகுந்தலா, நான் சொல்றது?’ என்று கேட்டுக் கண்களைச் சிமிட்டி சகுந்தலாவிடம் மாருத அன்பு கொண்ட வன்போல் ஒரு பிரமையை உண்டாக்கினன் அந்த நடிப்புக் கலைஞன். . - . சகுந்தலாவின் அடி உதட்டல் அரைகுறையாகச் சின்னப் புன்னகை தோன்றி மறைந்தது. சாமண்ணுவின் கபட நாடகம் அவளுக்குப் புரியாமலில்லை. ஆனலும் தன் உணர்ச்சிகளை அவள் வெகு திறமையோடு மறைத்துக் கொண்டாள்.

'ஏன் சாமண்ணு, கதாநாயகி திரும்பற வரைக்கும் ஷல்ட் டிங் கிடையாதுதானே? நீயும் நாளைக்கு எங்களோடு வாயேன்" என்ருர் ராமமூர்த்தி. - 'நான?' என்று ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்த சாமண்ணு வின் குரலில் வறட்சி தெரிந்தது. சகுந்தலா ஒய்யாரமாகத் திரும்பி அர்த்தத்தோடு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

'என்னது? என்ன விஷயம்?' என்ருள் சுபத்ரா. 'ஒன்றுமில்லை. நாளைக்கு இவர்களோடு நான் ஊர் பார்க்க வரணுமாம்!'

'நோ, நோ, நீங்க என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க. நீங்க எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கணும். அப்போதான் நான் உடம்பு தேறி சீக்கிரம் ஷூட்டிங் வர முடியும்' என்ருள். 'ரொம்ப சரி. சாமண்ணு உங்களோடயே இருக்கட்டும். நாங்கள் தனியாகவே ஊர் சுற்றிப் பார்த்து விடுகிருேம். என்ன சாமண்ணு! நீங்க என்ன சொல்றீங்க?' என்று கேட்டார் ராமமூர்த்தி. சரி' என்பதுபோல் தலையாட்டிய சாமண்ணு அவர்களை ஜாடை காட்டி வெளியே அழைத்துப் போனன். 'எதுக்கும் நான் சாயங்காலம் இவளுக்கு டிமிக்கி கொடுத் துட்டு வந்துடப் பார்க்கறேன். இன்னும் ஒரு அவுட்டோர்தான் பாக்கி. அப்புறம் இவளையும் இந்தக் கல்கத்தாவையும் விட் டுட்டு வந்துடறேன், பாருங்கோ!' என்ருன்.

ராமமூர்த்தி அர்த்தமில்லாமல் தலையாட்டிப் புறப்பட்டார். வாசல்வரை அவர்களைக் கொண்டுபோய் விட்டு வந்தான் சாமண்ணு.

அன்று இரவு சாமண்ணு உறங்கவில்லை. தங்க மயமான சொர்க்கம் அவன் மீது இறங்கியிருந்தது. எங்கே திரும்பின லும் தெய்வ வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அவ் வளவு இன்பத்தையும் தாங்க முடியாமல் திணறினன் சாமண்ணு.

சுபத்ரா அவன் கையைப் பற்றிய இடம் இன்னும் குளிர்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்துதான் அத்தனை ஆனந்தங்களும் உற்பத்தி ஆகின. அமிருதக் துளிகள் சுரந்து உடல் எங்கும் பரவி நின்றன.

173

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/166&oldid=1028143" இலிருந்து மீள்விக்கப்பட்டது